தமிழ்நாட்டில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் : கோவை-அண்ணாமலை, தென் சென்னை- தமிழிசை..!
, 2024 மக்களவைத் தேர்தலில் பாஜக சார்பில் தமிழ்நாட்டில் போட்டியிடும் வேட்பாளர்களின் முதற்கட்ட பட்டியல் வெளியாகி உள்ளது. முதற்கட்டமாக 9 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை அக்கட்சி தலைமை வெளியிட்டுள்ளது. கோவையில் அண்ணாமலையும், தென் சென்னையில் தமிழிசை சவுந்திரராஜனும், நீலகிரியில் மத்திய இணை அமைச்சர் எல். முருகனும் போட்டியிடுகின்றனர்.
கோயம்புத்தூர் - அண்ணாமலை
நெல்லை - நயினார் நாகேந்திரன்
நீலகிரி - எல். முருகன்
தென் சென்னை - தமிழிசை சவுந்தராஜன்
மத்திய சென்னை - வினோஜ் பி செல்வம்
கன்னியாகுமரி - பொன். ராதாகிருஷ்ணன்
கிருஷ்ணகிரி - நரசிம்மன்
பெரம்பலூர் - பாரிவேந்தர்
வேலூர் _ ஏ.சி. சண்முகம்
தென் சென்னை தொகுதியில் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கப்பாண்டியனை எதிர்த்து தமிழிசை போட்டியிடுகிறார்.
தமிழ்நாடு, புதுச்சேரியில் 21 தொகுதிகளில் திமுக நேரடியாக போட்டியிடுகிறது. பாஜக 7 தொகுதிகளில் நேரடியாக போட்டியிடுகிறது. அதில் இரு கட்சிகளும் மத்திய சென்னை, தென் சென்னை, நீலகிரி, கோவை ஆகிய 5 தொகுதிகளில் நேரடியாக மோதுகின்றன. வேலூர் மற்றும் பெரம்பலூர் தொகுதிகளில் திமுக போட்டியாளர்களுக்கு எதிராக பாஜக கூட்டணி கட்சியினர் போட்டியிடுகின்றனர்.
தூத்துக்குடி தொகுதியில் நயினார் நாகேந்திரன் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.தூத்துக்குடி தொகுதி, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட நிலையில், அந்த தொகுதிக்கு நயினார் நாகேந்திரன் அறிவிக்கப்பட்டது பாஜகவினர் இடையே குழப்பத்தை ஏற்படுத்தியது.
ஆனால், சிறிது நேரத்தில் பாஜக வேட்பாளர் பட்டியல் மாற்றப்பட்டு புதிய பட்டியல் வெளியானது. இதில், நயினார் நாகேந்திரன் திருநெல்வேலி தொகுதியில் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டது. திமுக கூட்டணியில் நெல்லை தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.