பிக்பாஸ் சீசன் 4இல் பங்கேற்கும் 11 பிரபலங்களின் லிஸ்ட்!

பிக்பாஸ் சீசன் 4 ஜூரம் பரவத் தொடங்கிவிட்டது. அதிலும் இரண்டு புரோமோக்கள் வந்த பிறகு யார் யார் போட்டியாளர்கள் என்று எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எகிறத் தொடங்கியுள்ளது.
அடுத்த மாதம் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்க உள்ள நிலையில், கொரோனா பரவல் இருப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் பிக்பாஸ் குழுவினர் ஈடுபட்டுள்ளனர். இதற்காக ஒவ்வொரு போட்டியாளர்களையும் தனிமைப்படுத்தப்பட்டு, அதற்குப் பின்னர்தான் பிக் பாஸ் வீட்டில் அனுப்பி வைக்கின்றனர்.
இந்நிலையில் நிகழ்ச்சியில் யார் யார் கலந்து கொள்ளப் போகிறார்கள் என்ற 11 பேர் கொண்ட லிஸ்ட் வெளியாகியுள்ளது. சிட்டிசன் பட நாயகி வசுந்தரா தாஸ், விஜய் டிவி தொகுப்பாளர் ரக்ஷன் போன்றோரும் இந்த லிஸ்டில் அடிபடுகின்றனர்.
ஷாலு ஷம்மு, சனம் ஷெட்டி, கிரண், அமிர்தா ஐயர், சிவானி நாராயணன், ரியோ ராஜ், அமுதவாணன், கரூர் ராமன், புகழ், பாலாஜி முருகதாஸ், ஆர் ஜே வினோத் ஆகியோர் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் போட்டியாளர்கள் குறித்த உறுதியான தகவல் நிகழ்ச்சியின் போது தான் தெரியவரும்.
newstm.in