1. Home
  2. தமிழ்நாடு

புத்தாண்டு தினத்தன்று நள்ளிரவு 1 மணி வரை மது கடைகளை திறக்க அனுமதி..!

1

புத்தாண்டு வருவதையொட்டி பல்வேறு இடங்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில் புதுச்சேரி அரசு கொண்டாட்டங்களுக்காக புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அதன்படி, புதுச்சேரியில் உள்ள மது விற்பனை செய்யும் கடைகள் கூடுதல் நேரம் கடைகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அப்படி திறக்க விரும்பினால் அதற்கான கட்டணத்தை மாநகராட்சியில் செலுத்தி உரிய அனுமதி பெற்று திறந்து கொள்ளலாம் என புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. புதுச்சேரி அரசு கூடுதல் மணிநேரம் மதுக்கடைகளை திறக்க அனுமதி கொடுத்துள்ளதால் மதுபிரியர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

பொதுவாக புத்தாண்டை கொண்டாட பல்வேறு பகுதியில் இருந்து இளைஞர்கள் புதுச்சேரிக்கு படையெடுத்து வருகின்றனர். புதுச்சேரி என்றாலே மதுவிற்கு மிகவும் பிரபலமான ஒரு பகுதி ஆகும். ஏனெனில் புதுச்சேரி ஒரு யூனியன் பிரதேசம் என்பதால் அங்கு மதுவிற்கான வரி மிகவும் குறைவு. இதனால் மற்ற மாநிலங்களை ஒப்பிடும் போது புதுச்சேரியில் மதுபானங்கள் குறைந்த விலையில் கிடைக்கிறது. எனவே, புத்தாண்டு வரும்போது, ​​​​அங்கு அதிக மக்களை வரவைப்பதற்காக அரசாங்கமும் பல்வேறு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்கிறது. ஹோட்டல்கள் மற்றும் விடுதிகளில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் மற்றும் வேடிக்கையான விஷயங்கள் நடைபெறும். இரவு முழுக்க பல்வேறு இடங்களில் பார்டிகளும் நடைபெறும்.

பலரும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கான இடங்களை முன்பதிவு செய்து வருகின்றனர். புதுச்சேரியில் மதுபானங்கள் விற்பனை செய்யப்படும் கடைகள் வழக்கமாக காலை 8 மணி முதல் இரவு 11 மணி வரையிலும், ரெஸ்டோ பார்கள் நள்ளிரவு 12 வரையிலும் திறந்திருக்கும். புத்தாண்டு தினத்தன்று, இந்த மது பானக் கடைகள் கூடுதல் நேரம் திறந்து இருக்க அரசு அனுமதி அளித்து வருகிறது. கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் புத்தாண்டைக் கொண்டாட மதுக்கடைகள், பார்கள் அதிக நேரம் திறந்திருக்க கலால்துறை அனுமதி வழங்கியிருக்கிறது. இதுகுறித்து கலால் துணை கமிஷனர் மேத்யூ பிரான்சிஸ், அனைத்து மதுபான கடைகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.

"புதுச்சேரியில் புத்தாண்டு தினத்தன்று நள்ளிரவு 1 மணி வரை மதுபானக் கடைகளை திறந்து இருக்கலாம். இரவு 11 மணிக்கு மேல் மதுபானங்களை விற்க விரும்பினால், கூடுதல் பணத்தை அரசுக்கு செலுத்த வேண்டும். வழக்கமான கடைகள் திறந்திருக்க 5,000 ரூபாய் செலுத்த வேண்டும், ஹோட்டலுடன் கூடிய பார் என்றால் 10,000 ரூபாய் செலுத்தி நள்ளிரவு 1 மணி வரை திறந்து இருக்கலாம். ஹோட்டலில் ஸ்பெஷல் ஷோ அல்லது நிகழ்ச்சி ஏற்பாடு செய்து இருந்தால் 15,000 ரூபாய் செலுத்தி அனுமதி பெற வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புத்தாண்டு தினத்தன்று நள்ளிரவில் 1 மணி வரை மதுக்கடைகளை திறக்கலாம் என்ற அறிவிப்பு மதுபிரியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Trending News

Latest News

You May Like