1. Home
  2. தமிழ்நாடு

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மது விற்பனை குறைவு தான்..!

Qq

தீபாவளி பண்டிகை, நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. 

இதனால், 30ம் தேதியும், தீபாவளி தினத்தன் றும், 430 கோடி ரூபாய்க்கு, மதுபானங்கள் விற்பனையாகின. தீபாவளிக்கு மட்டும், 220 கோடி ரூபாய்க்கு விற்பனை நடந்துள்ளது. கடந்த, 2023ல், தீபாவளி மற்றும் அதற்கு முந்தைய நாள் என, இரு நாட்கள் மது விற்பனை, 467 கோடி ரூபாயாக இருந்தது.

இது குறித்து, டாஸ்மாக் அதிகாரி ஒருவர் கூறியதாவது:

ஊழியர்களிடம் கிடைத்த தகவல் அடிப்படையில், 430 கோடி ரூபாய்க்கு, மது விற்பனை நடந்துள்ளது தெரியவந்துள்ளது.

இந்த தீபாவளிக்கு, நான்கு நாட்கள் அரசு விடுமுறை வந்ததால், பலரும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மது வாங்குவதற்காக, தீபாவளிக்கு குறைவாக வாங்கி உள்ளனர். இதனால் தான், கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு மது விற்பனை சற்று குறைந்துள்ளது. மாதம், 50 லட்சம் பெட்டி மது வகைகள் விற்பனையாகின்றன.

அதில் சாதாரண மது வகை பங்கு, 65 சதவீதம், நடுத்தரம், 20 சதவீதம், பிரீமியம் வகை, 15 சதவீதம் இருக்கும்.

தீபாவளி தினத்தில், பிரீமியம் மது விற்பனை, 30 சதவீதமாகவும்; நடுத்தர வகை, 20 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது.

Trending News

Latest News

You May Like