1. Home
  2. தமிழ்நாடு

1967, 1977 தேர்தல்களை போன்று 2026 தேர்தல் தமிழ்நாட்டிற்கு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் - தவெக தலைவர் விஜய்..!

1

விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கட்சி தொடங்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்டன. கட்சியை வலுப்படுத்தும் வேலையில் களமிறங்கியுள்ள விஜய் உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்தியுள்ளார். ஒரு வருடத்திற்கு முன்பே இணையதளம் மூலம் உறுப்பினர் சேர்க்கையை அறிமுகப்படுத்திய விஜய், வாட்ஸ் அப், டெலிகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களை பயன்படுத்தி உறுப்பினர் சேர்க்கையை நடத்தினார்.

TVK லிங்க் மூலம் பொதுமக்கள் உறுப்பினராக சேர்ந்து வந்த நிலையில் தற்போது புதிய செயலியை நிர்வாகிகளுக்காக விஜய் அறிமுகம் செய்து வைத்தார். சென்னை பனையூரில் உள்ள தவெக கட்சியின் தலைமை அலுவலகத்தில் இந்த செயலின் அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தவெக கட்சியின் பொது செயலாளர் ஆனந்த், ஆதவ் அர்ஜூனா உள்ளிட்டோர் பங்கேற்றனர். புதிய செயலியை அறிமுகம் செய்து வைத்த விஜய் வெற்றி பேரணியில் தமிழ்நாடு என்ற பரப்புரை இயக்கத்தையும் தொடக்கி வைத்தார்.

இதை தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் பேசிய தவெக தலைவர் விஜய், 1967, 1977 தேர்தல்களை போன்று 2026 தேர்தல் தமிழ்நாட்டிற்கு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த 2 தேர்தல்களிலும் ஆட்சி, அதிகாரத்தில் இருந்தவர்களை எதிர்த்து நின்று தான் புதிதாக வந்தவர்கள் வென்றார்கள். மக்களிடம் செல், மக்களிடம் இருந்து கற்றுக்கொள், மக்களிடம் வாழ் என்ற அண்ணாவின் பேச்சை மேற்கோள் காட்டி தேர்தலில் வெற்றி பெறுவது குறித்து பேசினார்.

மேலும் மக்களை ஊருக்கு ஊர் நேர் சந்தித்தாலே நாம் நிச்சயம் தேர்தலில் வெற்றி பெற முடியும். அதனால் தான் இந்த செயலி அறிமுகம் செய்யப்பட்டது. அடுத்தது மதுரை மாநாடு, மக்கள் சந்திப்பு, பயணம் என மக்கள் உடன் மக்களாக தான் இருக்க போகிறோம். நல்லதே நடக்கும், வெற்றி நிச்சயம் என்று தெரிவித்தார்.

Trending News

Latest News

You May Like