சினிமாவை போல் , ரவுடிகளை பிடிக்க சென்ற போலீசாருக்கு துப்பாக்கிச்சூடு !! டிஎஸ்பி , ஆய்வாளர் உள்பட 8 போலீஸார் சுட்டுக்கொலை

சினிமாவை போல் , ரவுடிகளை பிடிக்க சென்ற போலீசாருக்கு துப்பாக்கிச்சூடு !! டிஎஸ்பி , ஆய்வாளர் உள்பட 8 போலீஸார் சுட்டுக்கொலை

சினிமாவை போல் , ரவுடிகளை பிடிக்க சென்ற போலீசாருக்கு துப்பாக்கிச்சூடு !! டிஎஸ்பி , ஆய்வாளர் உள்பட 8 போலீஸார் சுட்டுக்கொலை
X

கான்பூர் மாவட்டம், சவுபேபூர் போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட பகுதி திக்ரு கிராமம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்த பிரபல ரவுடி விகாஸ் துபே. இவர் மீது கொலை, கொள்ளை என 60-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்நிலையில் ரவுடி விகாஸ் துபே சமீபத்தில் ஒருவரைக் கொலை செய்ய முயற்சி செய்த வழக்கில் அவரைக் கைது செய்ய போலீஸார் தேடி வந்தனர். தலைமறைவாக இருந்த ரவுடி விகாஸ் துபே கிராமத்தில் தங்கியிருப்பதாக அறிந்த போலீஸார் , அவரைக் கைது செய்வதற்காக நேற்று இரவு சென்றனர்.

டிஎஸ்பி தேவேந்திர மிஸ்ரா, ஆய்வாளர் பில்ஹார், இரு துணை ஆய்வாளர்கள், 5 காவலர்கள் எனப் பெரிய குழுவினர் சென்றனர். போலீஸார் அந்தக் கிராமத்துக்குள் நுழைய முடியாதவகையில் பல்வேறு தடுப்புகளை வழியெங்கும் ரவுடிகள் செய்திருந்தனர்.

அதையும் தாண்டி போலீஸார் கிராமத்துக்குள் சென்றபோது, ஒரு வீட்டின் மாடியில் பதுங்கி இருந்த ரவுடிகள் பலர் போலீஸார் மீது திடீரென துப்பாக்கியால் சுட்டனர். ரவுடிகள் சுடுவதை போலீஸார் சற்றும் எதிர்பார்க்கவில்லை.

போலீஸார் பதிலடி கொடுக்க முனைவதற்குள் ரவுடிகள் சரமாரியாகத் துப்பாக்கியால் சுட்டதில் டிஎஸ்பி தேவேந்திர மிஸ்ரா, ஆய்வாளர் பில்ஹார், இரு துணை ஆய்வாளர்கள் , 4 காவலர்கள் என 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 4 போலீஸார் காயமடைந்தனர்.

இதையடுத்து, உடனடியாக பக்கத்து மாவட்டமான கன்னூஜ் மாவட்டத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு போலீஸார் வரவழைக்கப்பட்டனர். ஆம்பலன்ஸுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு காயமடைந்த போலீஸார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அங்கிருந்து ரவுடிகள் அனைவரும் தப்பிவிட்டதால் அவர்களை போலீஸார் தேடி வருகின்றனர். இந்தச் சம்பவம் குறித்து முதல்வர் யோகி ஆதித்யநாத் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளார். துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த போலீஸாரின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்த முதல்வர் ஆதித்யநாத் இந்தச் சம்பவத்தில் குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும், முழுமையான அறிக்கை அளிக்கவும் போலீஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

Newstm.in

Next Story
Share it