1. Home
  2. தமிழ்நாடு

தமிழகத்தில் நவ., 17 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு..!

1

சென்னை வானிலை மையத்தின் இயக்குநர் செந்தாமரை கண்ணன் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: தென் தமிழக உள் மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களிலும், தென் தமிழக கடலோர மாவட்டங்களில் அனேக இடங்களிலும், வட தமிழக மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்துள்ளது. புதுச்சேரியில் லேசான மழை பதிவாகி உள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடத்தில் 15, மண்டபத்தில் 14, பாபம்னில் 8 ராமேஸ்வரத்தில் 6 செ.மீ., மழை பதிவாகி உள்ளது.

கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக நேற்று தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் நவ.,12,13 தேதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும். நவ., 14, 15 தேதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும். நவ.,16, 17 தேதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

சென்னை மற்றம் புறநகரில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 31-32 செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 - 25 டிகிரி செல்சியசாகவும் இருக்கக்கூடும்.

நவ.,14 அன்று தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதை ஒட்டிய அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடைஇடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். நவ.,15 அன்று மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடை இடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

Trending News

Latest News

You May Like