1. Home
  2. தமிழ்நாடு

தமிழகத்தில் இன்று முதல் 5-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு..!

1

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று 01-ம் தேதி முதல் 05-ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். 

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. 

அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்த பட்ச வெப்பநிலை 28-29 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். இவ்வாறு வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

Trending News

Latest News

You May Like