இன்று முதல் 7 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு..!
சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். தற்போது வடக்கு திசையில் நகர்ந்து தென்மேற்கு வங்கக்கடலில் நிலவுகிறது.
தமிழகத்தில் இன்று (டிச.,20) முதல் 7 நாட்கள் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. ஆந்திராவில் இன்று ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதி ஆந்திரா நோக்கி நகரும்.
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் மதியம் 1:00 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.