1. Home
  2. தமிழ்நாடு

இந்த 18 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் மழை!

இந்த 18 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் மழை!


வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, தமிழகத்தின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அந்த வகையில் கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, சேலம், நாமக்கல், தருமபுரி, ஈரோடு, நீலகிரி, தேனி, திண்டுக்கல், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய 18 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும், மற்ற கடலோர மற்றும் உள் மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும். கடலூர், நீலகிரி, சேலம் ஆகிய 3 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யலாம்.

இந்த 18 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் மழை!

சென்னையைப் பொறுத்த வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்பு உண்டு.
மேலும் தென்மேற்கு பருவமழை ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் மாநில பகுதிகளிலிருந்து திங்கள்கிழமை முதல் விலகத் தொடங்கியிருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Trending News

Latest News

You May Like