1. Home
  2. தமிழ்நாடு

வாழ்க்கை எப்போதும் ஒரு மாயவலை தான் - அமீர் குரலில் மிரட்டி இருக்கும் டீஸர் வெளியானது..!

1

பருத்திவீரன், ராம், மௌனம் பேசியதே போன்ற வெற்றி படங்களை கொடுத்திருக்கிறார் இயக்குனர் அமீர். அதேசமயம் கடந்த 2009இல் யோகி என்னும் திரைப்படத்தில் கதாநாயகனாகவும் அறிமுகமானார். வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான வடசென்னை திரைப்படத்திலும் நடித்து பெயர் பெற்றார். 

தற்போது மீண்டும் வெற்றிமாறனுடன் இணைந்து வாடிவாசல் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். பிறகு மாயவலை என்னும் திரைப்படத்தில் ஹீரோவாக நடித்திருக்கிறார். இந்த படத்தை ரமேஷ் பாலகிருஷ்ணன் இயக்க யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். ராம்ஜி ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தில் ஆர்யாவின் தம்பி சத்யா மற்றும் பலர் நடித்துள்ளனர். முதலில் இந்த படத்தை அமீரும் யுவன் சங்கர் ராஜாவும் இணைந்து தயாரித்தனர். ஆனால் தற்போது வெற்றிமாறனும், அமீரும் இந்த படத்தை இணைந்து தயாரிக்கின்றனர். சில நாட்களுக்கு முன்பாக இதன் முதல் பார்வை வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், படத்தின் டீசர் சற்றுமுன் வெளியானது.அமீர் குரலில் மிரட்டி இருக்கும் டீஸர் இணையத்தில் வைரலாகி வருகிறது  

Trending News

Latest News

You May Like