1. Home
  2. தமிழ்நாடு

எல்ஐசியின் சூப்பர் ப்ளான்.. ரூ. 200 சேமித்தால் 28 லட்சம் பெறலாம்..!

1

மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்று இந்திய ஆயுள் காப்பீட்டு கழகம். எல்ஐசி எனப்படும் இந்த ஆயுள் காப்பீட்டு கழகம் மத்திய நிதித்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது. மிகவும் லாபகரமாக இயங்கும் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றாக எல்ஐசி உள்ளது.

எல்ஐசியில் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவருக்கும் பல பாலிசி திட்டங்களை வழங்குகிறது. அந்த வகையில் எல்ஐசியின் ஜீவன் பிரகதி பாலிசி திட்டத்தின் வாயிலாக ரூ.28 லட்சம் நிதியை பெற முடியும். ஒவ்வொரு நாளும் ரூ. 200 சேமிப்பதன் வாயிலாக இந்த தொகை கிடைக்கும். குறைந்த பட்ச 12 வயது வரம்பு கொண்டவர்கள் ஜீவன் பிரகதி பாலிசியில் முதலீடு செய்யலாம். குறைந்த பட்சம் 12 வயதில் இருந்து 45 வயது வரை உள்ளவர்கள் எல்ஐசியின் ஜீவன் பிரகதி பாலிசி திட்டத்தில் முதலீடு செய்யலாம்.

இந்த பாலிசியில் முதலீடு செய்பவர்கள் வாழ்நாள் முழுவதும் நல்ல வருமானத்தை பெறலாம். இதில் டெபாசிட் செய்யப்பட வேண்டிய தொகைக்காக தினமும் 200 ரூபாய் சேர்த்தால் போதும். இதனை 6000 ரூபாயாக மாதம் முதலீடு செய்யலாம்.  அதன்படி 20 ஆண்டுகளுக்கு டெபாசிட் செய்யும் போது மொத்தமாக ரூ. 14,40,000 முதலீடு செய்யப்படும்.அனைத்து பலன்களையும் சேர்த்து இந்த முதலீடு தொகை 28 லட்சம் ரூபாயாக இருக்கும்.

இந்த பாலிசி  குறைந்தப் பட்சம் 12 ஆண்டுகளாகவும், அதிகபட்சம் 20 ஆண்டுகளாகவும் உள்ளது. இதோடு பாலிசியின் முதிர்வு காலம் 65 ஆண்டுகள் ஆண்டுகள் ஆகும்.இந்த பாலிசிக்கான தவணைத்தொகையை மாதம் அல்லது காலாண்டுக்கு ஒருமுறை, அரையாண்டு ஒருமுறை, ஆண்டுக்கு ஒரு முறை SSC/ECS மூலம் செலுத்துக்கொள்ளலாம். இதில் விபத்து காப்பீடாக குறைந்த பட்சம் ரூ. 10 ஆயிரமும், அதிகபட்சம் ரூ. 1 கோடியும் க்ளைம் செய்துகொள்ள முடியும்.

இந்த பாலிசியில் அதிகபட்ச வரம்பு கிடையாது. குறைந்த பட்சமாக ரூ. 1.5 லட்சம் காப்பீட்டுத் தொகையாக உள்ளது.

ஒரு வேளை இந்த பாலிசியின் மூலம் முதிர்வுத்தொகை ரூ. 2 லட்சம் எனில், 12 வயதில் ரூ.9663ம், 20 வயதில் ரூ.9741ம், 30 வயதில் ரூ.9947ம் மற்றும் 40 வயதில் ரூ.10,662 பிரீமியம் செலுத்த வேண்டும். இதேப்போல் முதிர்வுத்தொகை ரூ. 5 லட்சம் எனில், 12 வயதில் ரூ. 23,157 ம், 20 வயதில் 23,353 ரூபாயும், 30 வயதில் 23 ஆயிரத்து 868 ரூபாய், மற்றும் 40 வயதில் ரூ. 25, 656 பிரீமியம் செலுத்த வேண்டியிருக்கும்.  மேலும் இத்திட்டத்தின் மூலம் ரூ. 28 லட்சம் முதிர்வு தொகை பெற வேண்டும் எனில், தினசரி 200 ரூபாய் முதலீடு செய்ய வேண்டும். கூடுதலாக இந்த திட்டத்தில் 15ஆயிரம் ரூபாய் பென்ஷன் கிடைக்கும்.

எல்ஐசியின் ஜூவன் பிரகதி திட்டத்தின் முக்கிய பயன்கள்:

0-5 ஆண்டிற்கான பாலிசியில் அடிப்படை காப்பீட்டில் 100 %

6-10 ஆண்டிற்கான பாலிசியில் அடிப்படைக்காப்பீட்டில் 125%

11-15 ஆண்டிற்கான பாலிசியில் அடிப்படைக்காப்பீட்டில் 150 %

16-20 ஆண்டிற்கான பாலிசியில் அடிப்படைக்காப்பீட்டில் 200% வரை பலன் கிடைக்கிறது.

Trending News

Latest News

You May Like