இனி மாட்டு தொழுவங்களுக்கு லைசென்ஸ் கட்டாயம்..!
சென்னையில் மாடுகள் சாலைகளில் சுற்றித்திரிவதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகளை மாடுகள் முட்டி அசம்பாவிதங்கள் ஏற்படுகின்றன..மேலும் சாலையோரங்களில் புற்கள் முளைத்திருப்பதால், கால்நடைகளை அதன் உரிமையாளர்கள் மேய விடுகிறார்கள்.. இதனால், இரவு நேரங்களில், சாலையின் நடுவில் படுத்து கிடக்கும் மாடுகளால் வாகனங்கள் திடீரென பிரேக் அடிப்பது. பக்கவாட்டில் செல்வது போன்ற காரணங்களால் விபத்துகள் நடக்கின்றன.
நாய்களை போலவே, சென்னையில் சாலைகளில் மாடுகளும் சுற்றித்திரிவதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகளை மாடுகள் முட்டி அசம்பாவிதங்கள் ஏற்படுகின்றன. போதிய இடமும், தொழுவமும் இல்லாமல் வளர்ப்பதால்தான், இப்படி தெருக்களிலும் சாலைகளிலும் சுற்றித்திரிய நேரிடுகிறதாம். அதனால்தான், மாட்டு உரிமையாளர்கள் மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் விண்ணப்பித்து உரிமம் பெற வேண்டி வலியுறுத்தப்பட்டிருக்கிறார்களாம். மாநகராட்சியின் இந்த அதிரடிகள் சென்னைவாசிகளின் கவனத்தை பெற்று வருகின்றன.
மேலும், கால்நடைகளை வளர்ப்பவர்களை மாடுகளை உரிய கவனத்துடன் பராமரிக்குமாறு மாநகராட்சி வலியுறுத்தி வருகிறது.. அந்தவகையில், சென்னையில் மாட்டு தொழுவங்களுக்கு லைசென்ஸ் கட்டாயம் என்ற புதிய விதி ஜூன் முதல் அமலுக்கு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.