LIC ஹவுசிங் ஃபைனான்ஸ் நிறுவனத்தில் அப்ரண்டிஸ் வேலை – 192 காலியிடங்கள்..!
எல்.ஐ.சி. ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள 192 அப்ரண்டிஸ் (Apprentice) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் 22.09.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம், கல்வித் தகுதி என்ன, விண்ணப்பிப்பது எப்படி, வயது வரம்பு எவ்வளவு என்பது உள்ளிட்ட விவரங்களை இங்கே விரிவாகப் பார்க்கலாம்.
| Description | Details |
| வேலை பிரிவு | மத்திய அரசு வேலை 2025 |
| துறைகள் | எல்.ஐ.சி. ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட் LIC Housing Finance Limited |
| காலியிடங்கள் | 192 |
| பணி | அப்ரண்டிஸ் (Apprentice) |
| விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் மூலம் |
| கடைசி தேதி | 22.09.2025 |
| பணியிடம் | இந்தியா முழுவதும் |
| அதிகாரப்பூர்வ இணையதளம் |
https://www.lichousing.com/ |
காலிப்பணியிடங்கள்
எல்.ஐ.சி. ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட் கீழ்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
| பதவியின் பயார் | காலியிடங்கள் |
| அப்ரண்டிஸ் (Apprentice) | 192 |
| மொத்தம் | 192 |
மாநில வாரியான காலியிட விவரங்கள்:
| மாநிலம் | மொத்த காலியிடங்கள் |
| ஆந்திரப் பிரதேசம் | 14 |
| அசாம் | 1 |
| பீகார் | 1 |
| சத்தீஸ்கர் | 3 |
| டெல்லி | 3 |
| குஜராத் | 5 |
| ஹரியானா | 3 |
| ஜம்மு காஷ்மீர் | 1 |
| கர்நாடகா | 28 |
| கேரளா | 6 |
| மத்தியப் பிரதேசம் | 12 |
| மகாராஷ்டிரா | 25 |
| ஒடிசா | 1 |
| புதுச்சேரி | 1 |
| பஞ்சாப் | 2 |
| ராஜஸ்தான் | 6 |
| சிக்கிம் | 2 |
| தமிழ்நாடு | 27 |
| தெலங்கானா | 20 |
| உத்தரப் பிரதேசம் | 18 |
| உத்தரகண்ட் | 3 |
| மேற்கு வங்காளம் | 10 |
| மொத்தம் | 192 |
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
கல்வித் தகுதி
| பதவி | கல்வித் தகுதி |
| அப்ரண்டிஸ் (Apprentice) | விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதாவது ஒரு டிகிரி ( Any Degree ) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் |
வயது வரம்பு விவரங்கள்
எல்.ஐ.சி. ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட் (LIC HFL) Apprentice பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 20 வயது பூர்த்தி அடைந்தவராகவும், அதிகபட்சம் 25 வயதுக்கு மிகாதவராகவும் இருக்க வேண்டும்.
வயது வரம்பு தளர்வு (Age Relaxation):
| வகை | வயது தளர்வு |
| SC/ST | 5 ஆண்டுகள் |
| OBC | 3 ஆண்டுகள் |
| PwBD (பொது/EWS) | 10 ஆண்டுகள் |
சம்பள விவரங்கள்
எல்.ஐ.சி. ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட் ஆட்சேர்ப்பு 2025 இந்த அப்ரண்டிஸ் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ₹12,000 சம்பளமாக வழங்கப்படும்.
தேர்வு செயல்முறை
எல்.ஐ.சி. ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட் அப்ரண்டிஸ் பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் பின்வரும் செயல்முறைகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்:
- எழுத்துத் தேர்வு
- ஆவண சரிபார்ப்பு (Document Verification)
தமிழ்நாட்டில் தேர்வு மையங்கள்: சென்னை, கோயம்புத்தூர், மதுரை
விண்ணப்பக் கட்டணம்:
- SC, ST & Female விண்ணப்பதாரர்களுக்கு: ரூ.708/-
- PWD விண்ணப்பதாரர்களுக்கு: ரூ.472/-
- மற்ற விண்ணப்பதாரர்களுக்கு: ரூ.944/-
எப்படி விண்ணப்பிப்பது:
எல்.ஐ.சி ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட் (LIC HFL) நிறுவனத்தின் பணிகளுக்கு விண்ணப்பிக்க, விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் முறையில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். வேறு எந்த முறையிலும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.
விண்ணப்பிக்கும் வழிமுறைகள்:
- முதலில் பதிவு செய்தல் (Registration): தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் முதலில் மத்திய அரசின் NATS (National Apprenticeship Training Scheme) போர்ட்டலில் தங்களைப் பதிவு செய்துகொள்ள வேண்டும். போர்ட்டலின் முகவரி: [https://nats.education.gov.in/student_type.php]
- பயனர் கையேடு (User Manual): NATS போர்ட்டலில் பதிவு செய்வதில் ஏதேனும் சிக்கல்கள் ஏற்பட்டால், “Candidate User Manual” என்ற கையேட்டை https://nats.education.gov.in/assets/manual/student_manual.pdf என்ற முகவரியில் சென்று பார்க்கலாம்.
- விண்ணப்பித்தல்: NATS போர்ட்டலில் உள்நுழைந்த பிறகு, “LICHFL” என்று தேடி, விண்ணப்பத்திற்கான அறிவிப்பைக் கண்டறிந்து விண்ணப்பிக்கலாம்.
- முக்கிய குறிப்பு: விண்ணப்பிக்கும் அனைவரும், NATS போர்ட்டல் மூலம் வழங்கப்படும் Enrolment ID-ஐ எதிர்காலத் தகவல்களுக்காக குறித்து வைத்துக்கொள்வது மிகவும் அவசியம்.
- அடுத்த கட்ட நடவடிக்கை: வெற்றிகரமாக விண்ணப்பித்தவர்களுக்கு, BFSI SSC-யில் இருந்து (info@bfsssc.com) பயிற்சி மற்றும் விண்ணப்பக் கட்டணம் செலுத்துவது குறித்த விவரங்களுடன் மின்னஞ்சல் வரும்.