1. Home
  2. தமிழ்நாடு

பிரதமர் மோடிக்கு கடிதம் : 48 மணி நேரம் தான் டைம்... இல்லையெனில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவோம்..!

1

டெல்லியில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. டெல்லியில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க அரியானா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்து கூடுதலாக நீர் திறக்க வேண்டுமென கோரி சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.

இந்நிலையில், டெல்லி அமைச்சரும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அதிஷி, குடிநீர் பிரச்சனையை பிரதமர் மோடி தலையிட்டு தீர்க்க வேண்டும் என கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக, அதிஷி நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,

டெல்லியில் 28 லட்சம் பேர் குடிநீரின்றி தவித்து வருகின்றனர். இதுதொடர்பாக பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளேன். குடிநீர் பிரச்சனையை பிரதமர் மோடி தலையிட்டு தீர்க்க வேண்டும். நாளை 21-ம் தேதிக்குள் உரிய குடிநீரை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். 

இரு நாளுக்குள் பிரச்சனையை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால்,  21-ம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவோம். அரியானா அரசு தங்களது பங்கு குடிநீரை திறந்து விடவில்லை. 

மக்கள் வெயிலின் தாக்கம் மட்டுமின்றி, குடிநீர் பற்றாக்குறையையும் எதிர்கொள்கின்றனர். தண்ணீர் பிரச்சனையை தீர்க்குமாறு பிரதமர்  மோடிக்கு கடிதம் எழுதியுள்ளேன். தண்ணீர் திறக்கக் கோரி அரியானா அரசுக்கு பல கடிதங்கள் எழுதியுள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார். 

Trending News

Latest News

You May Like