1. Home
  2. தமிழ்நாடு

கர்னல் பி சந்தோஷ் பாபுவின் குடும்பத்துக்கு ரூ .5 கோடி நிதி மற்றும் அரசு பணிக்கான நியமனக் கடிதம் இன்று வழங்கப்பட்டது

கர்னல் பி சந்தோஷ் பாபுவின் குடும்பத்துக்கு ரூ .5 கோடி நிதி மற்றும் அரசு பணிக்கான நியமனக் கடிதம் இன்று வழங்கப்பட்டது


இந்தியா - சீனா எல்லையில் லடாக் கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த 15-ம் தேதி இரு தரப்பு ராணுவவீரர்களுக்கு இடையே நடந்த மோதலில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் உயிரிழந்தனர். இவர்களில் தெலங்கானா மாநிலம், சூரியாபேட்டையைச் சேர்ந்த கர்னல் சந்தோஷ் பாபுவும் (37) உயிரிழந்தார்.

கர்னல் பி சந்தோஷ் பாபுவின் குடும்பத்துக்கு ரூ .5 கோடி நிதி மற்றும் அரசு பணிக்கான நியமனக் கடிதம் இன்று வழங்கப்பட்டது

அவரது உடல் நேற்று முன்தினம் இரவு டெல்லியில் இருந்து தனி விமானத்தில் ஹைதராபாத் வந்தது. விமான நிலையத்தில் தெலங்கானா ஆளுநர் தமிழிசைசவுந்தர்ராஜன் மற்றும் அமைச்சர்கள், கட்சி தலைவர்கள், அதிகாரிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் சந்தோஷ் பாபுவின் உடல் காரில் அவரது சொந்த ஊரான சூரியாபேட்டைக்கு கொண்டு செல்லப்பட்டது. அவரது உடலைக் கண்டஅவரது மனைவி சந்தோஷி, குழந்தைகள், பெற்றோர், உறவினர், நண்பர்கள் கதறி அழுதனர்.

பொதுமக்களும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். பின்னர் கேசாரம் பகுதியில் உள்ள விவசாயநிலத்தில் சந்தோஷின் உடலுக்கு 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க இறுதி மரியாதை செலுத்தப்பட்டது.

அதன் பின்னர் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. இந்நிலையில் கர்னல் குடும்பத்துக்கு ரூ.5 கோடி நிதியும் , அரசு பணி வழங்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் கூறியிருந்தார். அதன் படி இன்று , தெலுங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் சூர்யாபேட்டையில் உள்ள வீரமணடைந்த கர்னல் பி சந்தோஷ் பாபுவின் இல்லத்திற்கு நேரில் சென்று கர்னல் மனைவி சந்தோஷியிடம் ரூ .5 கோடி நிதி மற்றும் குரூப் 1பணிக்கான நியமனக் கடிதத்தை இன்று வழங்கினார்

Newstm.in

Trending News

Latest News

You May Like