1. Home
  2. தமிழ்நாடு

கண்காணிக்கலாம் அதுக்காக இப்படியா ? தெருவெல்லாம் கேமராவுடன் வலம் வரும் மகள்!

1

இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து கொண்டே இருக்கின்றன. பெண் குழந்தைகள் வீட்டை விட்டு வெளியே சென்றால், அவர்கள் வீடு திரும்பும்வரை பெற்றோர்கள் வயிற்றில் நெருப்பை கட்டிக் கொண்டு இருக்க வேண்டிய சூழ்நிலை வந்துவிட்டது. சில கல்வி நிறுவனங்களிலேயே பாதுகாப்பு இல்லாதபோது, மிகப்பெரிய கலக்கம் பெற்றோர்களை சூழ்ந்து வருகிறது.

rape

இந்த சூழலில்தான், பாகிஸ்தானில் ஒரு தந்தை, தன்னுடைய மகளுக்காக செய்துள்ள காரியம்தான், வியப்பை தந்து வருகிறது. தன்னுடைய செல்ல மகள், எங்கு சென்றாலும் அதை கண்காணிப்பதற்காகவே, மகளின் தலையில் ஒரு சிசிடிவி கேமராவை பொருத்தியிருக்கிறாராம்.

இந்த கேமராவை எங்கிருந்து வேண்டுமானாலும் தன்னுடைய செல்போன் மூலமாக 24 மணி நேரமும் கண்காணிக்க முடியும். இப்போதெல்லாம் அந்த பெண், பாகிஸ்தானின் தெருக்களில் எங்கு போனாலும், தலையில் கேமராவுடன்தான் நடமாடி வருகிறாராம். இதை அம்மக்களே ஆச்சரியத்துடன் பார்த்துள்ளனர். இந்த விஷயம் மீடியா வரைக்கும் சென்று, செய்தியாளர் ஒருவர் அந்த பெண்ணை பேட்டி எடுத்துள்ளர்.



இப்படி தலை மேலே, கேமராவை மாட்டியிருப்பது உங்களுக்கு அசௌகரியமாக இல்லையா? என்று செய்தியாளர் கேட்டிருக்கிறார். அதற்கு அந்த பெண், “இந்த கேமராவுக்கான அக்ஸஸுடன் வீட்டிலிருந்தபடியே, நான் எங்கெல்லாம் செல்கிறேன் என்ன செய்கிறேன் என்பதை என் அப்பா கண்காணித்து வருகிறார்.

என்னுடைய அப்பா எது செய்தாலும், அது என்னுடைய நல்லதுக்குதான் செய்வார். அதனால் என்னுடைய அப்பாவின் முடிவுக்கு நான் ஆட்சேபம் தெரிவிக்கவில்லை” என்றார். மகளின் பாதுகாப்புக்காக தந்தை இவ்வாறு செய்தாலும், இந்த செயல்பாடு சர்ச்சையையும், விவாதத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.

Trending News

Latest News

You May Like