இலங்கைக்கு கப்பலில் போகலாம்..! விசா தேவையில்லை... பாஸ்போர்ட் மட்டும் போதும்..!
இலங்கை காங்கேசன்துறைக்கு நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து கப்பல் போக்குவரத்து கடந்த வருடம் அக்டோபர் மாதம் 14 ஆம் தேதி பிரதமர் நரேந்திரமோடியால் காணொளி காட்சி மூலம் தொடங்கப்பட்டது.
இந்த நிலையில் மழையை காரணமாக கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது அதனை தொடர்ந்து வருகின்ற மே மாதம் 13 ஆம் சிவகங்கை என்ற பெயர் கொண்ட வேறொரு கப்பல் நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன்துறைக்கு செல்ல உள்ளது ஏற்கனவே செரியாபாணி என்ற கப்பல் இயங்கிய நிலையில் வேறொரு கப்பல் மாற்றம் செய்யப்பட்டுள்ளது
பிரமாண்டமாக தயாரிக்கப்பட்டுள்ள கப்பலில் கீழ் தளத்தில் 133 இருக்கைகளும், மேல் தளத்தில் 25 இருக்கைகளும் உள்ளவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது
கீழ்தளத்தில் உள்ள இருக்கைகளில் பயணிக்க ஜிஎஸ்டி வரியுடன் 5000 ரூபாயும், மேல் தளத்தில் உள்ள சிறப்பு வகுப்பில் பயணிக்க ஜிஎஸ்டி வரியுடன் 7000 ரூபாயும் வசூல் செய்யப்பட உள்ளது
அந்தமானில் தயாராகியுள்ள சிவகங்கை கப்பல் மே10 ஆம் தேதி நாகை துறைமுகம் வரவுள்ளது.
இந்தியர்களுக்கு விசா கிடையாது என அந்நாட்டு அரசு அறிவித்துள்ள காரணத்தால் இந்த கப்பலில் இலங்கை செல்ல பாஸ்போர்ட் மட்டுமே போதுமானது தெரிவிக்கப்பட்டுள்ளது.