1. Home
  2. தமிழ்நாடு

வாங்க தெரிய்ஞ்சிக்கலாம்..! நில அளவை செய்ய ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?

1

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் அம்மாவட்ட மக்கள் இந்த சேவையை பயன்படுத்தி பயன்பெறுமாறு அறிவுறுத்தியுள்ளார். 

அதுமட்டுமில்லாமல் தமிழ்நாடு அரசின் அறிவித்துள்ள நில அளவீட்டுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி, ஆன்லைனில் கட்டணம் செலுத்துவது எப்படி என்பது உள்ளிட்ட முக்கிய வழிகாட்டு நெறிமுறைகளையும் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில் தூத்துக்குடி மாவட்ட பொதுமக்கள் நிலஅளவை செய்ய எந்நேரத்திலும் எவ்விடத்திலிருந்தும்' நிலஅளவை கட்டணம் உள்ளிட்ட கட்டணங்களை செலுத்த வங்கிகளுக்கு நேரில் செல்லாமல் இணைய வழியிலேயே செறுத்தி விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது என கூறியுள்ளார். 

நில உரிமையாளர்கள் தங்களது நிலங்களை அளவீடு செய்ய சம்பந்தப்பட்ட வட்ட அலுவலகங்களுக்கு நேரில் சென்று விண்ணப்பம் சமர்பித்து வந்த நிலையில், வட்டஅலுவலகங்களுக்கு நேரில் செல்லாமல், httstamilnilam.tn.gw.incitizen என்ற இணைய வழியில் விண்ணப்பிக்கும் புதிய வசதியை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 20.11.2023 அன்று தொடங்கிவைக்கப்பட்டுள்ளது. இப்புதிய சேவையின் மூலம் பொதுமக்கள் நிலஅளவை செய்ய எற்நேரத்திலும் எவ்விடத்திலிருந்தும்' நிலஅளவை கட்டணம் உள்ளிட்ட கட்டணங்களை செலுத்த வங்கிகளுக்கு நேரில் செல்லாமல். Citizen Portal மூலமாக இணைய வழியிலேயே செலுத்தி விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

தற்போது இச்சேவையினை தமிழ்நாடு முழுவதும் அனைத்து பொதுசேவை மையங்கள் (இசேவை) மூலமாகவும் விண்ணப்பிக்கும் வகையில் இவ்வசதி விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. நில உரிமைதாரர்கள் தங்களது நிலங்களை அளவை செய்ய பொதுசேவை மையங்களை அணுகி, நிலஅளவைக்கான கட்டணத்தை செலுத்தி விண்ணப்பிக்க இயலும். நிலஅளவை செய்யப்படும் தேதி மனுதாரருக்கு குறுஞ்செய்தி அல்லது அலைபேசி காமிலாக தெரிவிக்கப்படும். மேலும் நிலஅளவை செய்யப்பட்ட பின்னர் மனுதாரர் மற்றும் நிலஅளவர் கையொப்பமிட்ட அறிக்கை வரைபடம் நிலஅளவரால் பதிவேற்றம் செய்யப்பட்டு, மனுதாரர் hts eservicestngwin - என்ற இணையவழிச் சேவையின் மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பொதுமக்கள் அனைவரும் இச்சேவையை பயன்படுத்திக் கொள்ளுமாறு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் கேட்டுக் கொண்டுள்ளார். 

Trending News

Latest News

You May Like