'ஆரம்பிக்கலாங்களா’ : ஆவின் பால் பாக்கெட்டில் இடம்பெற்றுள்ள வாசகம்..!

சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி விளம்பரம் முதன்முறையாக ஆவின் பால் பாக்கெட்டில் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டன. இது வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தொடர்ந்து பொங்கல், தீபாவளி, கிறிஸ்துமஸ், ரம்ஜான், சுதந்திர தினம் உள்ளிட்ட பண்டிகைநாட்களில் வாழ்த்து செய்தி அச்சடித்து வெளியிடப் பட்டது.
இந்நிலையில், தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தொடங்கியுள்ள நிலையில், மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்தும்வண்ணம் அனைத்து ஆவின் பால் பாக்கெட் டுகளிலும் ‘மழைநீரை சேகரிக்க ஆரம்பிக்கலாங்களா’ என்ற வாசகத்துடன் அச்ச டிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.
மழை நீர் சேகரிப்பு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த ஆவின் பால் பாக்கெட்டில் இடம்பெற்ற “ஆரம்பிக்கலாங்களா’ வாசகம் பொது மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது.