வாங்க தெரிஞ்சிக்கலாம்.. இரும்பு பெட்டியில் பணத்தை வைக்கலாமா ...? பணம் சேர பணப்பெட்டி ரகசியம்..!
ஒரு பொருள் நம்மிடம் அதிகமாக சேர வேண்டும் என்றால் அந்த பொருளுக்கு உகந்த பொருட்கள் அதனுடன் இருக்க வேண்டும். அந்த வகையில் நாம் பணத்தை சேர்க்க வேண்டும் என்றால் பணத்தை வைக்கும் இடமானது பணத்திற்கு பிடித்த இடமாக இருக்க வேண்டும் அல்லது பணத்திற்கு பிடித்த பொருட்கள் பணத்துடன் இருக்க வேண்டும். அதற்கு மாறாக அதற்கு எதிரான பொருட்கள் இருக்கும் பட்சத்தில் பணம் நம்மிடம் சேராது. எவ்வளவு முயற்சி செய்தாலும் அது நம்மிடம் வரவே வராது.
அந்த வகையில் தான் இன்றைய காலத்தில் பலரும் செய்யக்கூடிய தவறுகளில் ஒன்று சனி கிரகத்திற்குரிய உலோகமான இரும்பு பீரோவில் பணத்தை வைப்பது. இப்படி வைப்பதன் மூலம் பணவரவு என்பது படிப்படியாக குறைய ஆரம்பிக்கும். அதையும் மீறி பணம் வந்தாலும் அது வீண் விரயமாக செலவாகும். அப்படி என்றால் எந்த இடத்தில் பணத்தை வைப்பது என்ற கேள்வி வரும்.
அன்றைய காலத்தில் நம்முடைய முன்னோர்கள் மரத்தால் செய்த பெட்டியில் பணத்தையும் நகையையும் சேர்த்து வைத்திருந்தார்கள். அப்படி தான் நாமும் வைக்க வேண்டும். அப்பொழுதுதான் பணமும் நகையும் சேர்ந்து கொண்டே இருக்கும். மாமரம், பலாமரம், சந்தன மரம் போன்ற மரங்களால் செய்யப்பட்ட பணப்பெட்டியில் நாம் பணத்தையும் நகையையும் வைப்பதன் மூலம் அது அதிக அளவில் சேர ஆரம்பிக்கும்.
இப்படி நாம் பணப்பெட்டி வாங்குவதாக இருந்தாலும் அல்லது செய்வதாக இருந்தாலும் அந்த பணப்பெட்டிக்கு மேலே கும்பம் இருப்பது போல் செய்ய வேண்டும். இப்படி செய்வதன் மூலம் அதிக அளவில் பணமானது சேமிக்கப்படும். கும்பம் என்பது சேமிப்பிற்குரிய ஒரு குறியீடாக கருதப்படுகிறது. கும்பம் இருக்கும் இடத்தில் எந்த பொருளை வைத்தாலும் அது அதிக அளவில் சேரும் என்பதால் பணப்பெட்டியில் இந்த முறையில் நாம் கையாள வேண்டும். -
இதோடு மட்டுமல்லாமல் நம்முடைய பாட்டிகள் காலத்தில் அவர்கள் இடுப்பில் ஒரு சுருக்குப் பையை வைத்திருப்பார்கள். அந்த சுருக்குப் பையை எடுத்து பார்க்கும் பொழுது அதற்குள் ரூபாய் நோட்டுகளை சுருட்டி சுருட்டி போட்டு வைத்திருப்பார்கள். எவ்வளவு இருக்கும் என்று நம்மால் கணக்கே பண்ண முடியாத அளவிற்கு பணத்தை அதில் சேர்த்து வைத்திருப்பார்கள். அந்த முறையில் நாமும் ஆரஞ்சு, ரோஸ், மஞ்சள், சிவப்பு போன்ற நிறங்களில் சுருக்குப் பையை தயார் செய்து அதில் பணத்தையோ நகையோ போட்டு வைத்தோம் என்றால் அது பல மடங்கு பெருக ஆரம்பிக்கும். என்னதான் பணப்பெட்டியை நாம் நினைப்பது போல் வெள்ளியில் கூட செய்து வைத்தாலும் அதில் நேரடியாக பணத்தையோ நகையோ வைக்காமல் சுருக்குப் பையில் போட்டு வைப்பதன் மூலம் பணவரவு என்பது அதிகரிக்கும். மேலும் இந்த பணப்பெட்டியை படுக்கையறையில் வைப்பதற்கு பதிலாக ஸ்டோர் ரூம் அல்லது பூஜை அறையில் மகாலட்சுமி தாயாரின் பாதத்திற்கு கீழாக வைக்கும் பொழுது அதன் பலன் என்பது பல மடங்கு அதிகரிக்கும்.
இந்த எளிமையான வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் பணம் சேர்வதற்குரிய வாய்ப்புகள் அதிகரிக்கும். அந்த வாய்ப்புகளை முறையாக பயன்படுத்தி பணத்தை சேர்த்து அதன் மூலம் நலமுடன் வாழ முடியும்.