1. Home
  2. தமிழ்நாடு

இதை தெரிஞ்சிக்கோங்க..! புதிய பிவிசி ஆதார் கார்டை ஆன்லைனில் வாங்குவது எப்படி?

1

உங்களது ஆதார் கார்டை ஆன்லைனில் கன்வெர்ட் செய்து பிவிசி கார்டை உருவாக்க UIDAI வகை செய்துள்ளது.UIDAI வெப்சைட்டுக்கு சென்று ரூ.50 கட்டணம் செலுத்த வேண்டும். பின் பிவிசி கார்டை பெறலாம். பிளாஸ்டிக்கினால் ஆன பிவிசி ஆதார் கார்டு பாதுகாப்பானது. சேதமடையாது.

இதற்கு atuidai.gov.in/ என்ற UIDAI வெப்சைட்டுக்கு செல்ல வேண்டும். அங்கு My Aadhaar என்ற பட்டனை கிளிக் செய்யவும்.

அதில் Order Aadhaar PVC Card என்பதை கிளிக் செய்யவும்.

பின் Order Now என்பதை கிளிக் செய்யவும். உங்களது ஆதார் எண்ணையும் கேப்சாவையும் என்டர் செய்யவும்.

பின்னர் Proceed என்பதை கிளிக் செய்யவும்.

உங்களது முகவரி மற்றும் மொபைல் எண்ணை என்டர் செய்ய வேண்டும்.

இதைத் தொடர்ந்து Submit என்பதை கிளிக் செய்யவும். உங்கள் மொபைல் போனுக்கு ஒரு ஓடிபி வரும்.

அந்த ஓடிபியை என்டர் செய்துவிட்டு Verify என்பதை என்டர் செய்யவும்.

நீங்கள் ரூ.50 கட்டணம் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்படுவீர்கள். Pay Now என்பதை கிளிக் செய்ய வேண்டும். உங்களுக்கு கன்பர்மேஷன் மெசேஜ் வரும்.

இந்த பிவிசி ஆதார் கார்டு உங்களது முகவரிக்கு 15 வேலை நாட்களுக்குள் வந்து சேரும்.

Trending News

Latest News

You May Like