இது தெரிஞ்சிக்கோங்க..! மெட்ரோ ரயில் சேவையில் முக்கிய மாற்றம்!

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “2024 ஆம் ஆண்டு ஜனவரி 15, 16 மற்றும் 17- ஆம் தேதிகளில் ஞாயிற்றுக்கிழமையின் அட்டவணையின் படி மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்
பொங்கல் விடுமுறையை முன்னிட்டு, 2024 ஆம் ஆண்டு ஜனவரி 15 (திங்கட்கிழமை), 16 (செவ்வாய்க்கிழமை) மற்றும் 17 (புதன்கிழமை) ஆகிய தேதிகளில் ஞாயிற்றுக்கிழமையின் அட்டவணையின் படி மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். காலை 05.00 மணி முதல் இரவு 11.00 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்.
காலை 05.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரை மற்றும் இரவு 08.00 மணி முதல் 10.00 மணி வரை 10 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். மதியம் 12.00 மணி முதல் இரவு 08.00 மணி வரை 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்.
இரவு 10.00 மணி முதல் 11.00 மணி வரை 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். மெட்ரோ ரயில் பயணிகள் இச்சேவையை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.” இவ்வாறு மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.