இப்படி பண்ணலாமே..! பரந்தூருக்கு பதில் திருப்போரூரில் புதிய விமான நிலையம்: அன்புமணி யோசனை

ஆனால், இரு ஆண்டுகளுக்கு முன் விமான நிலையம் அமைப்பதற்காக பரந்தூர் தேர்வு செய்யப்பட்டதை சாதனையாக கொண்டாடிய திமுக அரசு, இப்போது மக்களிடம் எதிர்ப்பு அதிகரித்ததால் பழியை முந்தைய அரசு மீது போட முயல்வதாக அவர் அந்த அறிக்கையில் குறிப்பிட்டார்.
இது பரந்தூர் பகுதி மக்களின் கோபத்தை தணிப்பதற்காகத் தமிழக அரசின் சார்பில் தெரிவிக்கப்படும் அப்பட்டமான பொய் என திரு அன்புமணி சொன்னார்.
சென்னைக்கு இரண்டாவது விமான நிலையம் அமைக்க வேண்டும் என்ற யோசனை எழுந்த போதே திருப்போரூர் பகுதியில் அரசுக்குச் சொந்தமான தரிசு நிலம் 5 ஆயிரம் ஏக்கருக்கும் கூடுதலாக இருக்கிறது என்றும்அங்கு விமான நிலையம் அமைக்கப்பட்டால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும் பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வந்ததாக அவர் அந்த அறிக்கையில் தெரிவித்தார்.
“திருப்போரூரில் விமான நிலையம் அமைப்பதற்குத் தடையாக இருப்பது அப்பகுதிக்கு அருகில் கல்பாக்கம் அணுமின்நிலையமும் தாம்பரத்தில் விமானப்படைத் தளமும் இருப்பது தான் எனச் சொல்லப்படுகிறது.
“அதன்படி பார்த்தால் இப்போது விமான நிலையம் அமைக்கப்படவுள்ள பரந்தூருக்கு அருகில் கடற்படைத் தளம் உள்ளது. மும்பை, பெங்களூர், ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்களில் புதிய விமான நிலையங்களுக்கு அருகில் பழைய விமான நிலையங்களும் செயல்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன,” என்றார் திரு அன்புமணி.
“அறிவியலும், தொழில்நுட்பமும் வளர்ந்து விட்ட இந்த காலத்தில் மனம் இருந்தால் திருப்போரூரில் பசுமை விமான நிலையத்தை அமைத்து வெற்றிகரமாக செயல்படுத்த முடியும். திருப்போரூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கப் பட்டால், அதையும் இப்போதுள்ள விமான நிலையத்தையும் மெட்ரோ ரயில் மூலம் எளிதாக இணைக்க முடியும்,” எனத் திருப்போரூரில் புதிய விமான நிலையம் அமைப்பதால் ஏற்படும் நன்மைகளை அவர் கூறினார்.