1000 மடங்கு தாக்குதல் நடத்துவோம்! அதிரடி காட்டும் அமெரிக்கா!
1000 மடங்கு தாக்குதல் நடத்துவோம்! அதிரடி காட்டும் அமெரிக்கா!

உலக நாடுகளை அச்சுறுத்தி, நாட்டாமை செய்வதில் எப்போதுமே பெரிய அண்ணன் அமெரிக்கா கிங் தான். தென்கொரியா, பாகிஸ்தான், சீனா, இலங்கை, ஈரான், ஈராக் என அமெரிக்கா பஞ்சாயத்து செய்ய நுழையாதே நாடுகளே உலக வரைபடத்தில் இல்லை எனும் அளவிற்கு மூக்கை நுழைப்பதில் அமெரிக்க அதிபர்களுக்கு அந்த காலம் முதலே பொழுதுபோக்காக இருந்து வருகிறது.
கொரோனா உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் இந்த அசாதாரண சூழ்நிலையில் அமெரிக்காவில் அதிபருக்கான தேர்தல் வரும் நவம்பர் மாதம் நடைபெற இருக்கிறது. அதிபர் தேர்தலுக்கு முன்பாக அமெரிக்கத் தூதரைக் கொலை செய்ய ஈரான் திட்டமிட்டிருப்பதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதற்கு பதில் அளித்து அறிக்கை ஒன்றை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வெளியிட்டுள்ளார்.
அமெரிக்காவுக்கு எதிராக ஈரான் தொடுக்கும் ஒவ்வொரு தாக்குதலுக்கும் ஆயிரம் மடங்கு பதில் தாக்குதல் அளிக்கப்படும்' என்று அதிரடி காட்டி விமர்சித்துள்ளார் ட்ராம்ப். 2018 முதலே அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே நிலவி வந்த பனிப்போர் காரணமாக ஈரானின் முக்கியப் போர் தளபதி காசிம் சுலைமானியை அமெரிக்கா ஏவுகணைத் தாக்குதல் நடத்திக் கொன்றது குறிப்பிடத்தக்கது. அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஈரான் ராணுவம், ஈராக்கில் இயங்கிவரும் அமெரிக்க ராணுவத் தளத்தில் தாக்குதல் நடத்தியது.
அந்தத் தாக்குதலில் நூற்றுக்கும் மேற்பட்ட அமெரிக்க வீரர்கள் பலர் படுகாயம் அடைந்தனர். மேலும் அணு ஆயுத ஒப்பந்த விவகாரத்தில் அமெரிக்கா ஈரான் மீது தொடுக்கும் பொருளாதார நெருக்கடி காரணமாகவும் இரு நாடுகள் இடையே விரிசல் மேலும் அதிகரித்து வருகிறது.
newstm.in