1. Home
  2. தமிழ்நாடு

மக்களே தெரிஞ்சிகோங்க..! திருப்பதியில் இந்த தேதிகளில் இலவச தரிசன டிக்கெட்டுகள் முழுவதும் ரத்து..!

1

ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு, ஆண்டுதோறும் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் தரிசனம் செய்ய வருகிறார்கள். அந்த வகையில் தற்போது புரட்டாசி மாதம் என்பதால் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கிறது. அதுவும் சனிக்கிழமை என்றால் கால் வைக்க இடம் இல்லாத அளவுக்கு பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. நாள் கணக்கில் பக்தர்கள் நின்று சாமி தரிசனம் செய்யும் நிலைமை ஏற்படுகிறது.

அதனால் தேவஸ்தானம் அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளது. அதாவது கூட்டத்தை கட்டுப்படுத்த இலவச தரிசன டிக்கெட்டுகளை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது. ஏனெனில் ஆன்லைன் மற்றும் நேரடியாக வரும் பக்தர்கள் இலவச தரிசனம் செய்ய ஒரே நேரத்தில் அனுமதிக்கப்படுவதால் கூட்டம் அதிகமாக இருக்கிறது. அதனால் அக்டோபர் மாதம் 7,8,14,15 ஆகிய தேதிகளில் ஒதுக்கப்பட்ட இலவச தரிசன டிக்கெட்டுகளை முழுவதும் ரத்து செய்வதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது. நேரடியாக திருமலைக்கு வரும் பக்தர்கள் மட்டுமே வரிசைப்படி இலவச தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

Trending News

Latest News

You May Like