நேற்று குறைவு... இன்று உயர்வு... இது தான் தங்கத்தின் நிலை..!

சென்னையில் பொங்கல் திருநாளான நேற்று (ஜன.14ஆம் தேதி) ஆபரணத்தங்கத்தின் விலை சற்று குறைந்த நிலையில், இன்று மீண்டும் உயர்ந்துள்ளது.
சென்னையில் நேற்று (ஜன.14ஆம் தேதி) ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.58,640க்கும், கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.7,330க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில், பொங்கல் திருநாளான இன்று (ஜன.15ஆம் தேதி) சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.58,720க்கும், கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.7,340க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல், 18 காரட் ஆபரணத்தங்கத்தின் விலையும் சவரனுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.48,400க்கும், கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ரூ.6,050க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையும் கிலோவுக்கு ரூ.1,000 உயர்ந்து ரூ.1,01,000க்கும், கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ரூ.101க்கும் விற்பனை செய்யப்படுகிறது.