இன்று முதல் 28ம் தேதி வரை தொழுநோய் கண்டறியும் முகாம் நடைபெறும் - பொது சுகாதாரத் துறை..!

தொழுநோய் பரவலைக் கட்டுப்படுத்த தேசிய தொழுநோய் ஒழிப்பு திட்டத்தின்கீழ், தமிழகத்தில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
குறிப்பாக, சிறப்பு முகாம்கள் மூலம் ஆண்டுதோறும் கணிசமான நபர்களுக்கு ஆரம்ப நிலையிலே இந்தோயின் தாக்கம் கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுவதால் தீவிர பாதிப்பு தடுக்கப்படுகிறது. அந்த வகையில், இந்தாண்டு தொழுநோய் பாதிப்பை ஆரம்ப நிலையில் கண்டறிய 37 மாவட்டங்களில் உள்ள 133 கிராம தொகுதிகள் மற்றும் 27 நகர்ப்புறங்களில் உள்ள வீடுகளுக்கு நேரடியாக சென்று கள ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளது.
பிப்ரவரி 13ம் தேதி முதல் 28ம் தேதி வரை நடைபெறும் முகாமில் (LEPROSY CASE DETECTION CAMP -2025) கிராம பகுதிகளில் 18,192 முன்களப் பணியாளர்களும், நகர் பகுதியில் 4,332 முன்களப் பணியாளர்கள் இந்த பரிசோதனையை மேற்கொள்ள உள்ளனர் என பொது சுகாதாரத்துறை இயக்குநர் தெரிவித்துள்ளார்.