1. Home
  2. தமிழ்நாடு

குடியிருப்பு பகுதியில் சுற்றித்திரியும் சிறுத்தை! பொது மக்கள் அச்சம் !

குடியிருப்பு பகுதியில் சுற்றித்திரியும் சிறுத்தை! பொது மக்கள் அச்சம் !


நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே குடியிருப்பு பகுதியில் சிறுத்தை ஒன்று சுற்றித்திரிவதால், அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.

குன்னூர் அருகே நல்லப்பன் தெரு குடியிருப்பு பகுதி அருகில் அடர்ந்த வனப்பகுதியில் காட்டெருமை, கரடி உள்ளிட்ட வன விலங்குகள் நடமாட்டம் இருந்து வருகிறது. அந்த பகுதியில் இரவு நேரங்களில் நாய்கள் குறைக்கும் சத்தம் ஆதிகமாக இருப்பதும், ஆனால், காலையில் அங்குள்ள நாய்கள் காணாமல் போவதும் வாடிக்கையாக இருந்து வந்தது. இதனால் பொது மக்கள் குழப்பம் அடைந்தசனர்.

இந்த நிலையில், அப்பகுதியில், லோகு என்பவருக்கு சொந்தமான வீட்டில் பொருத்தப்பட்ட சிசிடிவி கேமரா காட்சியை பார்த்தபோது, அந்த பகுதியில் சிறுத்தை ஒன்று வந்து செல்வதும், சத்தமிடும் நாயை சிறுத்தை தூக்கிச் செல்வதும் பதிவாகி இருந்தது.இதனால், சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இப்பகுதியி்ல், ஏற்கனவே இரண்டு சிறுத்தைகள் நடமாடி வருவதாக பொது மக்கள் அச்சம் தெரிவித்து இருப்பது குறிப்பிடதக்கது.

newstm.in

Trending News

Latest News

You May Like