எங்கள் திரையரங்கில் “லியோ இங்கு திரையிடப்படாது” - ரோகினி திரையரங்கம்..!

நாளை (அக். 19) லோகேஷ் கனகராஜ் இயக்கதில் விஜய் நடித்துள்ள ‘லியோ’ திரைப்படம் வெளியாக உள்ளது. த்ரிஷா, அர்ஜுன், மன்சூர் அலிகான், கவுதம் மேனன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இப்படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ நிறுவனம் இதனை தயாரித்துள்ளது.
வெளியாக உள்ளது. த்ரிஷா, அர்ஜுன், மன்சூர் அலிகான், கவுதம் மேனன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இப்படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ நிறுவனம் இதனை தயாரித்துள்ளது.
இந்நிலையில், சென்னை கோயம்பேட்டில் அமைந்துள்ள ரோகிணி திரையரங்க வளாகத்தில் ‘இங்கு லியோ திரைப்படம் திரையிடப்படாது’ என்று எழுதப்பட்ட போர்டு வைக்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. விநியோகஸ்தர்களுடனான பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்படாததால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.