மீராவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து லியோ படக்குழு எடுத்த முடிவு..!

இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியின் மகள் மீரா, இன்று திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இச்செய்தி தமிழ் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடிகர், நடிகைகள் மற்றும் இயக்குநர்கள் நேரில் சென்று விஜய் ஆண்டனிக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். சமூக வலைதலப்பக்கங்களிலும் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், 'லியோ' படக்குழுவினர் தங்களது சமூக வலைதளத்தில் மீராவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து இன்று வெளியிடவுள்ள போஸ்டரை நாளை வெளியிடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.