லியோ ரிலீஸ்..! தியேட்டரில் திருமணம் செய்து கொண்ட விஜய் ரசிகர்..!
தமிழக முழுவதும் 'லியோ' திரைப்படம் வெளியாகியுள்ள நிலையில் விஜய் ரசிகர்கள் அதனைக் கொண்டாடி வருகின்றனர்.சென்னை உள்பட தமிழகம் முழுவதும் இன்று காலை 9 மணிக்கு 'லியோ’ படத்தின் முதல் காட்சி தொடங்கியுள்ளது. ஆனால் அண்டை மாநிலங்களில் அதிகாலை 4 மணிக்கு காட்சிகள் தொடங்கி பாசிட்டிவ் விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், விஜயின் தீவிர ரசிகரான புதுக்கோட்டை சேர்ந்த வெங்கடேஷ் என்பவர் தனது காதலியுடன் 'லியோ' படத்தின் முதல் காட்சியைப் பார்க்க வந்துள்ளார்.
படம் தொடங்கியவுடன், அவர் ரசிகர்கள் முன்னிலையில் தனது காதலிக்கு மோதிரம் மாற்றி திருமணத்தை அனைவர் முன்பாக நிச்சயம் செய்து கொண்டார். அப்போது அங்கிருந்த விஜய் ரசிகர்கள் ஆரவாரம் செய்து தம்பதிகளை வாழ்த்தினர்.
'லியோ’ படத்தின் முதல் காட்சியின் போது தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று நாங்கள் முடிவு செய்திருந்தோம் என்றும் அதன்படி திருமணம் செய்து கொண்டோம் என்றும் அந்த தம்பதிகள் தெரிவித்தனர்.