1. Home
  2. தமிழ்நாடு

சட்ட மன்ற தேர்தல் அறிக்கை தயாரிப்பு : கெத்து காட்டிய தி.மு.க - சைலண்ட் மூடில் அ.தி.மு.க.!

சட்ட மன்ற தேர்தல் அறிக்கை தயாரிப்பு : கெத்து காட்டிய தி.மு.க - சைலண்ட் மூடில் அ.தி.மு.க.!


தி.மு.க. தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது.வரும் 2021 சட்ட மன்ற தேர்தலை எதிர் கொள்ளும் வகையில் தி.மு.க. தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவை அமைத்தது. அதன் முதல் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள முரசொலி மாறன் வளாகத்தில் இன்று காலை துவங்கியது.

காலை 9 மணிக்கு துவங்கிய, இந்த கூட்டத்தில் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு ஒருங்கிணைப்பாளர் டி.ஆர். பாலு, எம்.பி-க்கள் கனிமொழி, டி.கே.எஸ். இளங்கோவன், திருச்சி சிவா, ஆ.ராசா, அந்தியூர் செல்வராஜ், துணை பொது செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன், பேராசிரியர் ராமசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதனைத் தொடர்ந்து, தேர்தல் அறிக்கை தொடர்பான ஆலோசனைகளை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.இந்த குழு தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்யும் என்றும், அப்போது, வேளாண்மை, வணிகம், தொழில்துறை உள்ளிட்ட பல்வேறு தரப்பு பிரதிநிதிகளை சந்தித்து அவர்களிடம் கருத்து கேட்க உள்ளது.

பின்னர் , அதனை தொகுத்து வாக்காளர்களை கவரும் வகையில் தேர்தல் அறிக்கையாக தயாரித்து, பிப்ரவரி மாதம் தலைமையிடம் சமர்பிக்க உள்ளது.தேர்தல் அறிக்கை தயாரிக்கும் விவகாரத்தில் அ.தி.மு.க-வை காட்டிலும் தி.மு.க. வேகம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

newstm.in

Trending News

Latest News

You May Like