கிரிக்கெட் வீரர் டேவிட் ஜான்சன் காலமானார்..!
முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் டேவிட் ஜான்சன் வியாழக்கிழமை தனது அடுக்குமாடி குடியிருப்பின் பால்கனியில் இருந்து விழுந்ததில் உயிரிழந்தார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் டேவிட் ஜான்சன் கர்நாடக மாநிலம் கொத்தனூர் கனகஸ்ரீ லேஅவுட்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். இந்த நிலையில் இன்று (ஜூன் 20) காலை, பால்கனியில் இருந்து அவர் தவறி விழுந்தோ அல்லது மன அழுத்தம் காரணமாகவோ தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இன்று காலை 11.15 மணியளவில் இந்த சம்பவம் நடைபெற்றதாகவும், அப்போது அவரது குடும்ப உறுப்பினர்கள் வீட்டில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து தகவலறிந்த கொத்தனூர் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.