பழம்பெரும் நடிகை ஜெயந்தி குணமடைந்து வருகிறார் -மகன் தகவல்..!

பழம்பெரும் நடிகை ஜெயந்தி குணமடைந்து வருகிறார் -மகன் தகவல்..!

பழம்பெரும் நடிகை ஜெயந்தி குணமடைந்து வருகிறார் -மகன் தகவல்..!
X

1960-ல் வெளியான யானை பாகன் படத்தில் அறிமுகமானவர். ஜெயந்தி. தமிழில், இருவர் உள்ளம், அன்னை இல்லம், படகோட்டி, கர்ணன், வீராதி வீரன், நீர்குமுழி, முகராசி, பாமா விஜயம், எதிர்நீச்சல், இருகோடுகள் உள்பட பல படங்களில் நடித்துள்ளார். 

தமிழ் மட்டுமல்லாமல் கன்னடம், மலையாளம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் 500-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். ஜெமினி கணேசன், சிவாஜி, எம்.ஜி.ஆர், ராஜ்குமார் அப்போதைய திரைப்பிரபலங்களுடன் நடித்த இவருக்கு வயது 75 ஆகிறது. 

பெங்களூருவில் குடும்பத்துடன் வசித்து வரும் ஜெயந்திக்கு கடந்த சில நாட்களுக்கு முன் திடீர் மூச்சுத் திணறலும் ஏற்பட்டது. இதையடுத்து  மருத்துவமனை அனுமதிக்க பட்ட அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. 

அதில் அவருக்கு  கொரோனா தொற்று இல்லை என்பது தெரிய வந்தது. இதையடுத்து, நடிகை ஜெயந்திக்கு மருத்துவர்கள்  தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். அவர் இன்னும் தீவிர சிகிச்சை பிரிவில் இருப்பதாகவும் படிப்படியாக அவர் நலமாகி வருவதாகவும் அவரது மகன் கிருஷ்ண குமார் தெரிவித்துள்ளார்.

கடந்த 2018 ல்  இது போன்று  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மீண்டு வந்தவர் என்பது குறிப்பிடதக்கது..

newstm.in

Next Story
Share it