இணையத்தில் லீக்கான நடிகையின் ஆபாச காட்சி..!
நடிகை திவ்யா பிரபா நடித்துள்ள படம் ‘All We Imagine as Light’..இந்த படத்தில் நடித்த ஆபாச காட்சி ஒன்று இணையத்தில் கசிந்துள்ளது. இது குறித்து நடிகை திவ்யா பிரபா சமீபத்தில் அளித்த பேட்டியில், “இந்த வேடத்தில் நடிக்க ஒப்புக்கொண்டபோது, கேரளாவில் உள்ள சில அமைப்புகளின் எதிர்ப்பை எதிர்பார்த்தேன். கசிந்த வீடியோவைப் பகிர்பவர்கள் வெறும் 10% பேர்தான்.
அவர்களின் மனநிலையை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. படத்திற்கு ஒப்புதல் அளித்த மத்திய குழுவில் மலையாளிகள் இருந்தனர். ஒரு நடிகையாக எனக்கு பிடித்த கதைகளில் நடிக்கிறேன். "இந்தப் படத்திலும் அப்படித்தான் நடித்தேன். புகழுக்காக ஆபாச காட்சிகளில் நடிக்கிறேன் என்று சிலர் என்னை விமர்சிக்கிறார்கள். பல விருதுகள் வாங்கியுள்ளேன். விமர்சன ரீதியாகப் பாராட்டும் படங்களிலும் நடித்துள்ளேன். அதனால் ஆபாசமாக நடித்து புகழ் அடைய வேண்டும் என்ற சூழ்நிலையில் நான் இல்லை ‘’ என்று பதிலளித்தார்.