முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் மனைவி லீலா ஆறுமுகம் காலமானார்..!
1996 முதல் 2001 வரையிலான திமுக ஆட்சிகாலத்தில் விவசாயத் துறை அமைச்சராக பதவி வகித்த வீரபாண்டி ஆறுமுகம்.
இந்நிலையில், திமுக முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் மனைவி லீலா ஆறுமுகம் இன்று பிற்பகலில் காலமானார். உடல்நலக்குறைவால் சென்னை கோடம்பாக்கத்தில் அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், உயிர் பிரிந்தது. அவரது மறைவுக்கு திமுகவினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். கருணாநிதிக்கு மிக நெருக்கமான வீரபாண்டி ஆறுமுகம், சேலம், கொங்கு மண்டலத்தில் திமுகவின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
லீலா ஆறுமுகம் உடலுக்கு மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார் மாண்புமிகு துணை முதலமைச்சர்.