உடனே கிளம்புங்க..! தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1320 குறைவு..!
தீபாவளி முடிந்துவிட்ட நிலையில் 3 நாட்கள் கழித்து, நவ.,05ம் தேதி ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்தது. ஒரு சவரன் ரூ.58,840க்கும், ஒரு கிராம் ரூ.7,355க்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்று (நவ.,06) சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.58,920க்கும், ஒரு கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.7,365க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில், இன்று (நவ.,07) சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1320 குறைந்து ரூ.57,600க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.7,200க்கு விற்பனையாகிறது. தங்கத்தின் விலை, ஒரே நாளில் ஒரு சவரனுக்கு ரூ.1320 சரிந்துள்ளது. இதனால் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
வெள்ளி விலை என்ன?
ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.3 குறைந்து, ரூ.102க்கு விற்பனை ஆகிறது.