உடனே கிளம்புங்க..!! அதிரடியாக குறைந்த தங்கம் விலை..!!
நமது நாட்டில் தங்கம் விலை கடந்த சில காலமாகவே தொடர்ந்து அதிகரித்து வந்தது. 22 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ. 7450 வரை கூட சென்றது. 24 கேரட் தங்கமும் ரூ. 8100ஐ தாண்டி இருந்தது.
இத்தகைய சூழலில் தான் இன்று ஆபரண தங்கத்தின் விலை மளமளவென சரிந்தது. அதன்படி சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.440 குறைந்து காணப்பட்டது. இதனால் சென்னையில் இன்று ஒரு சவரன் ஆபரண தங்கம்ரூ.57,760க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.55 குறைந்து ரூ.7,220க்கு விற்பனையாகி வருகிறது.
வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 குறைந்து ரூ.102க்கு விற்பனையாகிறது.