கசிந்த தகவல் : தவெக தலைவர் விஜய் போட்டியிடப்போவது இந்தத் தொகுதியிலா?

தவெக தலைவர் விஜய் தொடர்ந்து மத்திய மற்றும் மாநில அரசுகளை விமர்சித்து வருகிறார். விஜய் கட்சியின் தலைவர்கள் பெயரை சொல்ல அச்சப்படுவதாக விமர்சனங்கள் எழுந்த நிலையில் பிரதமர் மோடி மற்றும் முதல்வர் ஸ்டாலின் மற்றும் ஆகியோரின் பெயர்களை குறிப்பிட்டு பேசினார். விஜய் அறிக்கை மற்றும் டிவீட்டர் வாயிலாகவே அரசியல் செய்து வந்த நிலையில் அவரை வொர்க் ஃபிரம் ஹோம் அரசியல்வாதி என சக அரசியல் கட்சிகள் விமர்சித்தன.
இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் பூத் கமிட்டி மாநாடு கோவையில் கடந்த 26, 27 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைவர் விஜய் பங்கேற்றார். இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பூத் ஏஜென்டுகளுக்கு பயிற்சி பட்டறை அளிக்கப்பட்டது. இந்தக் கூட்டத்திலும் ஆளும் திமுகவை கடுமையாக விமர்சனம் செய்தார் விஜய்.
இந்நிலையில் விஜய் போட்டியிடவுள்ள தொகுதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி விஜய் கோவை மாவட்டத்தில் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கோவையில் மக்கள் ஆதரவு எப்படி இருக்கும் என்பதை அறிந்து கொள்வதற்காகவே இந்த பூத் கமிட்டி கருத்தரங்கு நடத்தப்படுவதாக கூறப்படுகிறது.
எதிர்பார்த்தது போலவே கோவையில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால் விஜய் கோவை தொகுதியில் போட்டியிடுவது உறுதியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேநேரத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களுக்கு மேல் உள்ள நிலையில் மற்ற தொகுதிகளிலும் விஜய்க்கான வரவேற்பு எப்படி உள்ளது என்பதை பொறுத்தே முடிவு செய்யப்படும் எனவும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.