1. Home
  2. தமிழ்நாடு

வெளியான பகீர் தகவல்..! இன்னும் நிறைய விமானங்கள் விபத்தாகும்..! - போயிங் குறைபாடு குறித்து எச்சரித்த பொறியாளர்!

Q

ஆமதாபாத்தில் இருந்து பிரிட்டன் தலைநகர் லண்டனுக்கு ஏர் இந்தியாவின் 'போயிங்' 787-8' ரக 'ட்ரீம் லைனர்' இரட்டை இன்ஜின் விமானம், நேற்று மதியம் 1:38 மணிக்கு புறப்பட்டது. 30 வினாடிகளில் இந்த விமானம், பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. இதில், விமானத்தில் பயணித்தவர்கள், விழுந்த இடத்தில் இருந்தவர்கள், விடுதி மாணவர்கள் உட்பட 265 பேர் உயிரிழந்துள்ளனர். விமான விபத்து தொடர்பாக, பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் விபத்திற்குள்ளான போயிங் 787 மாடல் விமானங்கள் குறித்து அமெரிக்க பொறியாளர் சாம் சலேபோர் வெளியிட்டுள்ள கருத்துகள் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. போயிங் நிறுவனத்தின் 787 ட்ரீம்லைனர் என்ற விமானம்தான் தற்போது விபத்திற்குள்ளானது. இந்த விமானங்கள் காலப்போக்கில் பெரும் விபத்துகளை சந்திக்கும் என தான் முன்னரே எச்சரித்ததாக சாம் சலேபார் கூறியுள்ளார்.
அவர் "போயிங் 787 ட்ரீம்லைனர் உற்பத்தியில் சில குறைபாடுகளை கவனித்தேன். Fuselage எனப்படும் விமான பாகங்களை இணைக்கும்போது சரியான இணைப்பு முறைகளை பின்பற்றவில்லை. பொருந்தாத பாகங்கள் மீது ஊழியர்கள் ஏறி குதித்து அவற்றை சரி செய்தனர். இது ஆரம்பத்தில் சரியாக இருந்தாலும், ஆயிரக்கணக்கான பயணங்களுக்கு பிறகு இந்த குறைபாடு பேரழிவை ஏற்படுத்தும், மேலும் மாசுபடிந்த குழாய்கள் விமானங்களின் ஆக்சிஜன் பயன்படுத்தப்படுகிறது. அமைப்பில் அவை முறையாக சுத்தம் செய்யப்படாவிட்டால் பெரும் வெடி விபத்திற்கு வழி வகுக்கும்" என எச்சரித்துள்ளார்.
விபத்து தொடர்பாக விமான போக்குவரத்து நிபுணரும், அனுபவம் வாய்ந்த விமானியுமான ஸ்டீவ் வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார். இவர் போயிங் 787-8 டிரீம் லைனர் மற்றும் போயிங் 777 ரக விமானங்களை இயக்கிய அனுபவம் அவருக்கு உள்ளது.
அந்த வீடியோவில் ஸ்டீவ் கூறியுள்ளதாவது:
விமானம் இருந்த உயரத்தில் இருந்து அதனை கணிக்க முடியாது. போயிங் 777 ரக விமானங்களை காட்டிலும் போயிங் 787 ரக விமானங்கள் திறன் வாய்ந்தவை. இந்த விமானத்தில் எந்த பிரச்னையும் இருந்ததாக தெரியவில்லை.
விமானத்தில் இருந்த இரண்டு இன்ஜின்களும், உந்து விசையை உருவாக்குகின்றனவா என தெரியவில்லை. தீப்பொறி, தீப்பிழம்பு ஏதும் இல்லை. வழக்கமாக இயங்கவில்லை என்பதற்கான அறிகுறியையும் காட்டவில்லை. விமானத்தில் 'லிப்ட்' திறன் தோல்வி ஏற்பட்டு உள்ளது. இதற்கு மின்சாரம் துண்டிப்பு காரணமாக இருக்கலாம். 'லிப்ட்' தோல்வியால், விமானம் பறப்பதை நிறுத்திவிட்டது என்பது முக்கியமான கருத்து.
இரண்டு இன்ஜின்களும் பழுதடைந்து இருந்தால், அதற்கு பறவைகள் மோதல் காரணமாக இருக்கலாம். ஆனால், வீடியோவில் அப்படி ஏதும் பார்க்க முடியவில்லை. இன்ஜின்களில் இருந்தும் எந்த தீப்பிழம்பும் இல்லை.
எரிபொருள் கலப்படம் என்பது மற்றொரு சாத்தியக்கூறு. இரண்டு இன்ஜின்களும் எரிபொருள் பகிரப்பட்ட இருந்தன. அப்போது எந்த பிரச்னையும் இல்லை. அனைத்தும் சுமுகமாக உள்ள நிலையில் இயந்திர பிரச்னையாக இருக்கும் என நான் நினைக்கவில்லை.
மற்றொரு காரணம், துணை விமானியை கியரை உரிய நேரத்தில் உயர்த்தும்படி விமானி கூறியிருப்பார். ஆனால், துணை விமானி பிளாப் ஹேண்டிலை பிடித்ததுடன், கியருக்கு பதில் 'பிளாப்'பை உயர்த்தியிருப்பார் என நினைக்கிறேன். அப்படி நடந்து இருந்தால், விமானம் பறப்பது நின்று இருக்கும். அந்த நேரத்தில் இறக்கைகளுக்கு மேல் உள்ள 'லிப்ட்' செயல் இழந்திருக்கும்.
விமானம் திடீரென வேகத்தை இழந்ததும், உயரத்தையும் விமானி இழந்திருக்கிறார். விசாரணை முடிவில் முழுமையான விவரங்கள் தெரியவரும்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Trending News

Latest News

You May Like