#BREAKING : பொதுச்செயலாளர் பதவிலிருந்து விலகிய முக்கிய தலைவர்!

நடந்து முடிந்த மக்களவை பொதுத் தேர்தலில் பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதியில் அக்கட்சிகள் நிறுவனர் பச்சமுத்து வேட்பாளராக களமிருந்தார்.
ஏற்கனவே இந்த தொகுதியில் கடந்த 2019 மக்களவைப் பொதுத் தேர்தலில், திமுக சார்பில் போட்டியிட்ட அவர் லட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று மக்களவை சென்றிருந்தார்.
இந்த முறை திமுக கூட்டணியில் இருந்து வெளியேறி, பாஜகவுடன் இந்திய ஜனநாயக கட்சி கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது.
இந்த தேர்தல் முடிவுவில் இந்திய ஜனநாயக கட்சியின் வேட்பாளர் பச்சமுத்து ஒரு லட்சத்து 61 ஆயிரம் வாக்குகளை பெற்று மூன்றாவது இடம் பிடித்தார்.
இந்த நிலையில், இந்த தோல்விக்கு பொறுப்பேற்று இந்திய ஜனநாயகக் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயசீலன், தனது பதவியை ராஜினாமா அறிவித்துள்ளார். செய்வதாக
பொதுவாக ஒரு அரசியல் கட்சி தேர்தலில் தோல்வியை சந்தித்தால், அந்தக் கட்சியின் முக்கிய தலைவர்கள் தோல்விக்கு பொறுப்பேற்று பதவியில் இருந்து விலகுவது வழக்கம்.
காங்கிரஸ் கட்சியின் தலைவராக பொறுப்பேற்று இருந்த ராகுல் காந்தி கூட தேர்தலின் தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.