1. Home
  2. தமிழ்நாடு

இயக்குனர் பாலாவை வாழ்த்திய எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி..!

1

முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் இயக்குனர் பாலா.இயக்குனர் பாலு மகேந்திராவின் உதவி இயக்குனராக பணியாற்றிய இவர், 1999-ம் ஆண்டு டிசம்பர் 10-ந் தேதி வெளியான சேது படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். சேது படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதனை தொடர்ந்து நந்தா, பிதாமகன், அவன் இவன், பரதேசி உள்ளிட்ட தரமான வெற்றிப் படங்களை கொடுத்தார்.

இவர் தற்போது நடிகர் அருண் விஜய்யை வைத்து 'வணங்கான்' படத்தை இயக்கியுள்ளார் . இப்படம் 2025ம் ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி வெளியாகிறது. இதனால் இந்த படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவை வருகின்ற டிசம்பர் 18ம் தேதி அன்று நடத்த இப்பட தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி திட்டமிட்டுள்ளார்.இதற்கிடையில், வருகிற 10-ந் தேதி அன்று பாலா திரையுலகிற்கு வந்து 25 ஆண்டுகளை நிறைவு செய்கிறார்.

இதனையடுத்து அவரது இயக்கத்தில் உருவாகிய ’வணங்கான்’ படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் 25 ஆண்டுகால திரை வாழ்க்கை விழா ஆகியவை இரண்டும் சேர்ந்து டிசம்பர் 18ஆம் தேதி விழாவாக கொண்டாடப்பட உள்ளது.

இந்நிலையில் டிசம்பர் 18ஆம் தேதி சென்னையில் நடைபெற இருக்கும் இந்த விழா குறித்து கேள்விப்பட்ட எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:

தமிழ் திரையுலகில் குறிப்பிடத்தக்க சில இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் திரு. பாலாஅவர்களின் திரையுலக வெள்ளி விழாவும், அவர் இயக்கிய 'வணங்கான்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவும் திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் வரும் டிசம்பர் 18ஆம் நாள் சென்னையில் நடைபெற இருப்பதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன்.

போட்டிகள் நிறைந்த தமிழ் திரை உலகில், தனது முதல் படத்தையே வணிக நோக்கமின்றி, சமூக நோக்கத்துடன் வெற்றிப்படமாக எடுத்து, இன்று வரை தனது பாணியை யாருக்காகவும் கைவிடாமல், தனித்து நின்று வெற்றி பெற்றுள்ளார். இயக்குநர் பாலா அவர்கள். வணிக நோக்கமின்றி, சாமான்ய மக்களின் வலியும், வேதனைகளையும் பிரதிபலிக்கும் வகையில் திரைப்படங்களை இயக்கி, கடந்த 25 ஆண்டுகளாக போட்டிகள் நிறைந்த தமிழ் திரையுலகில் தனக்கென ஒரு இடத்தை தேடிக் கொண்டவர் 'இயக்குனர் திரு பாலா அவர்கள்.
 

தனது திரையுலக குரு 'திரு. பாலுமகேந்திரா' என்று பெருமையுடன் கூறிக்கொள்ளும் இயக்குனர் திரு. பாலா அவர்களது கலைப்பயணம் வெற்றியுடன் தொடர வேண்டும் என்று எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.


 

Trending News

Latest News

You May Like