மக்களின் நாயகனாக மாறிய நடிகர் லாரன்ஸ்..கரையான் அரித்து 1 லட்சம் இழந்த சிவகங்கை தம்பதிக்கு நிதியுதவி..!
ராகவா லாரன்ஸ், ஏழை எளிய மக்களுக்கும் ஆட்டோ வாங்கி கொடுத்தல் போன்ற உதவிகளை செய்து வருகிறார்.
சமீபத்தில் சிவகங்கையை சேர்ந்த குமார், அவரது முத்துக்கருப்பி இருவரும் தங்கள் குழந்தைகளின் காதணி விழாவிற்காக பணத்தை சேர்த்து வைத்து வந்துள்ளனர். ஆனால் அந்த பணம் கரையான் அரித்ததால் அவர்களால் காதணி விழா நடத்த முடியாமல் போனது.
சிவகங்கை மாவட்டம் கிளாதரி கக்கனாம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முத்துகருப்பி 30, கணவர் குமார் 35. இரண்டு மகள்கள், ஒரு மகன் ஆகியோருடன் கூரை வீட்டில் வசிக்கிறார். அன்றாடம் வேலைக்கு சென்று கிடைக்கும் பணத்தை 500 ரூபாயாக மாற்றி தகர உண்டியலில் சேமித்து வந்துள்ளார். கூரை வீடு என்பதால் பாதுகாப்பிற்காக வீட்டினுள் குழி தோண்டி உண்டியலை புதைத்துள்ளார்.
மகள் காதணி விழாவிற்காக சேமித்து வைத்ததை இரு மாதங்களுக்கு முன் வெளியே எடுத்து எண்ணும் போது ஒரு லட்ச ரூபாய் வரை இருந்துள்ளது.
நேற்று காலை தகர உண்டியலை தோண்டி எடுத்துள்ளார். சமீபத்தில் பெய்த மழை காரணமாக தகரத்தை கரையான் அரித்து உள்ளே இருந்த 500 ரூபாய் நோட்டுகளையும் அரித்துள்ளது. வங்கியில் கரையான் அரித்த பணத்தை மாற்றலாம் என கூறியதை அடுத்து சிவகங்கை வங்கிக்கு சென்றுள்ளனர். வங்கி அதிகாரிகள் கிழிந்த நோட்டுகளை தான் மாற்ற முடியும், கரையான் அரித்த நோட்டுகளை மாற்ற நீங்கள் சென்னைக்கு தான் செல்ல வேண்டும் என திருப்பி அனுப்பியுள்ளனர். ஒரு வருடத்திற்கும் மேலாக சேமித்த பணம் கரையான் அரித்ததால் செய்வதறியாது திகைத்து போய் உள்ளனர்.
இந்த செய்தியறிந்த நடிகர் ராகவா லாரன்ஸ் அவர்களை அழைத்து ரூ.1 லட்ச ரூபாயை காதணி விழாவிற்காக கொடுத்து உதவியுள்ளார். அவரது இந்த உதவியை பலரும் பாராட்டி வருகின்றனர்.
.png)