1. Home
  2. தமிழ்நாடு

சட்டம் ஒழுங்கு சரியில்லை; அமித் ஷாவிடம் நேரில் சொன்ன ஜி.கே.வாசன்..!

Q

த.மா.கா., தலைவர் ஜி.கே.வாசன் அளித்த பேட்டி;
2026 தேர்தலுக்கான தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி வாய்ப்பு, கள நிலவரம் குறித்து அவருடன்(அமித் ஷா) பேசினேன். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை, அதை தி.மு.க., அரசால் கட்டுப்படுத்த முடியவில்லை. மக்களை திசை திருப்ப பல்வேறு தேவையற்ற விஷயத்தை தி.மு.க., கூறுவது பற்றி தெரிவித்தேன்.
தமிழகத்தில் பொறுப்புள்ள அமைச்சர் ஒருவரின் பேச்சு அநாகரிகமானது. அருவருப்பானது. இதுதான் அவர்களின் மாடலா என்று கேள்வி கேட்கிறேன். அவரை அமைச்சர் பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும்.
கூட்டணிக் கட்சி தலைவர் என்ற முறையிலே இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமானது. தேர்தலுக்கு இன்னமும் ஒரு வருடம் உள்ளது. இன்றைய கள நிலவரம் குறித்து அவரிடம் பேசினேன். தமிழகத்தில் ஒத்த கருத்துடைய கட்சிகள் ஒன்று சேரும். தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும் என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது.
இவ்வாறு அவர் கூறினார்.

Trending News

Latest News

You May Like