காங்கிரஸ் கட்சியினரும் திராவிடர்களும் ஜெலுசில் வாங்க ஓடுவதை பார்க்கும் போது சிரிப்பு சிரிப்பா வருது - குஷ்பூ..!

நம் நாட்டில் மொத்தம் 533 லோக்சபா தொகுதிகள் உள்ளன. இதில் மத்தியில் தனித்து ஆட்சியை பிடிக்க 273 தொகுதிகளில் 273 தொகுதிகளில் வெல்ல வேண்டும் கடந்த 2014, 2019 தேர்தல்களில் பாஜக கூட்டணி அமைத்து போட்டியிட்டாலும் கூட பாஜக தனி மெஜாரிட்டியை பெற்றது. இதையடுத்து மீண்டும் வென்று மத்தியில் ஹாட்ரிக் முறையில் ஆட்சியை பிடிக்கும் முனைப்பில் பாஜக உள்ளது. அதேவேளையில் பாஜகவை வீழ்த்த வேண்டும் என்ற முனைப்பில் காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து ‛இந்தியா’ கூட்டணியை உருவாக்கி பணி செய்தன.
இந்நிலையில் தான் நேற்று முன்தினம் 7 வது மற்றும் கடைசி கட்ட தேர்தல் முடிந்த பிறகு தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் வெளியாகி வருகின்றன. இதில் பெரும்பாலான கருத்து கணிப்புகள் மீண்டும் மத்தியில் பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணி ஆட்சி தான் அமையும் என தெரிவித்துள்ளன. பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் 300க்கும் அதிக இடங்களில் ஜெயிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இதனால் பாஜக கட்சி மகிழ்ச்சியில் இருக்கிறது.
இந்நிலையில் தான் பாஜக கட்சியை சேர்ந்தவரும் நடிகையுமான குஷ்பு திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினரை கிண்டலடித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், ‛‛காங்கிரஸ் கட்சியினரும், திராவிடர்களும் ஜெலுசில் மற்றும் பர்னோல் வாங்க ஓடுவதை பார்க்கும்போது அதிகமாக சிரிப்பு வருகிறது” என்றார்.
அதாவது எக்ஸிட் போல் ரிசல்ட்டில் மத்தியில் மீண்டும் பாஜக தான் ஆட்சியை பிடிக்கும் என்று தேர்தலுக்கு பல கருத்து கணிப்பு முடிவுகள் கூறியுள்ளன. இதனால் காங்கிரஸ் மற்றும் திமுகவினர் வயிற்றெறிச்சல் படலாம் என்பதை மறைமுகமாக அவர் கிண்டல் செய்துள்ளார். மேலும் அவரது பதிவில் சிரிக்கும் இமோஜிக்களை பயன்படுத்தியுள்ளார்.
I laugh more as I see many CONgressis and dravidians running out to buy Gelusil and Burnol. 😂😂😂😂😂🙏🏻
— KhushbuSundar (Modi ka Parivaar) (@khushsundar) June 1, 2024
I laugh more as I see many CONgressis and dravidians running out to buy Gelusil and Burnol. 😂😂😂😂😂🙏🏻
— KhushbuSundar (Modi ka Parivaar) (@khushsundar) June 1, 2024