1. Home
  2. தமிழ்நாடு

ஹஜ் புனிதப் பயணத்திற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி இதுதான்...!

1

இந்திய ஹஜ் குழு மூலம் 2026ஆம் ஆண்டு ஹஜ் பயணத்திற்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் வரும் ஜூலை 31ஆம் தேதி இரவு 11.59 வரை முடிய ஆன்லைன் விண்ணப்பத்தை இந்திய ஹஜ் குழு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். 

அதாவது https//hajcommittee.gov.in என்ற இணையம் வழியாக விண்ணப்பிக்கலாம். இல்லையெனில், ஐபோன் (அ) ஆண்ட்ராய்டு மொபைலில் "HAJ SUVIDHA" செயலியை பதிவிறக்கம் செய்து அதன்மூலமும் பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம்.  2026ஆம் ஆண்டு ஹஜ் பயணத்திற்கான விண்ணப்பதாரர்கள் ஹஜ் விண்ணப்பப் படிவத்தை கட்டணம் ஏதுமின்றி சமர்ப்பிக்கலாம்.

Haj Pilgrimage 2026: விண்ணப்பத்துடன் என்னென்ன இணைக்க வேண்டும்?

- இயந்திரம் மூலம் படிக்கத் தக்க பாஸ்போர்ட்டின் முதல் மற்றும் கடைசி பக்கம் 

- வெள்ளைநிற பின்னணியுடன் கூடிய சமீபத்திய பாஸ்போர்ட் அளவு புகைப்படம் 

- உறைத் தலைவரின் ரத்து செய்யப்பட்ட காசோலை நகல் அல்லது சேமிப்பு வங்கிக் கணக்கு புத்தக நகல் 

- முகவரிச் சான்றின் நகல் ஆகியவற்றை பதிவேற்றம் செய்யவேண்டும். 

கடந்த ஆண்டைப் போலவே தேர்ந்தெடுக்கப்பட்ட ஹஜ் பயணிகள் தங்கள் விருப்பத்தின் வரிசை அடிப்படையில் இரண்டு புறப்பாட்டு தளங்களை தேர்வு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Haj Pilgrimage 2026: இந்த நிபந்தனையை தெரிந்துகொள்ளுங்கள்

வாழ்நாளில் ஒருமுறை மட்டும் இந்திய ஹஜ் குழு மூலமாக ஹஜ் பயணத்தை மேற்கொள்ளலாம் என்னும் விதிமுறையை இந்திய ஹஜ் குழு செயற்படுத்தி வருகிறது. இதனால், குறைந்தபட்சம் 2026ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி வரையில் செல்லக்கூடிய இயந்திரம் மூலமாக படிக்கத் தக்க பன்னாட்டு பாஸ்போர்ட்டை விண்ணப்பதாரர்கள் வைத்திருக்க வேண்டும். 

2026ஆம் ஆண்டு ஹஜ் சுற்றுப்பயணத்திற்கான வழிமுறைகளை இந்திய ஹஜ் குழுவின் இணையதள முகவரி https://hajcommittee.gov.in மூலம் தெரிந்து கொள்ளலாம். 2025ஆம் ஆண்டு ஹஜ் பயணத்திற்கான "நுசுக் மசார்" போர்ட்டலின்படி பாஸ்கோர்ட்டுக்காக புதிதாக விண்ணப்பிப்பவர்கள் குடும்ப பெயர்/கடைசி பெயர் ஆகியவற்றை காலியாக விடாமல்
கண்டிப்பாக பூர்த்தி செய்யப்பட வேண்டும் என்கிற நிபந்தனை உள்ளது.

Haj Pilgrimage 2026: முதல் தவணைத் தொகை எவ்வளவு?

2026ஆம் ஆண்டில் புனித ஹஜ் பயணம் மேற்கொள்ள தேர்ந்தெடுக்கப்படும் பயணிகள் நபர் ஒருவருக்கு முதல் தவணைத் தொகையாக ரூ.1.50 இலட்சத்தை செலுத்த தயார் நிலையில் இருப்பதுடன் தங்களிடம் செல்லத்தக்க பாஸ்போர்ட் உள்ளதை உறுதி செய்து கொள்ளவேண்டும்.
ஆன்லைன் மூலம் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை விண்ணப்பதாரர்கள் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி ஜூலை 31 ஆகும். 

Haj Pilgrimage 2026: ரத்து செய்தால் கடும் அபராதம்

மேலும் ஹஜ் பயணிகள் மரணம் அல்லது கடுமையான மருத்துவ நோய் தவிர வேறு காரணத்திற்காக பயணத்தை ரத்து செய்ய நேரிட்டால் அபராதம் விதிக்கப்படும். இதனால் விண்ணப்பதாரர்களுக்கு நிதி இழப்பு ஏற்படக்கூடும். எனவே ஹாஜிகள் தங்கள் தயார்நிலை, ஹஜ் பயணத்தை மேற்கொள்வதற்கான உறுதிப்பாட்டை கவனமாக பரிசீலித்த பின்னரே விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்" என குறிப்பிடப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like