1. Home
  2. தமிழ்நாடு

'லப்பர் பந்து' பட நடிகர் கைது..!

Q

மதுரவாயலை சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுவனின் பெற்றோர் விருகம்பாக்கம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில் பள்ளி விடுமுறை நாளில் ஆலப்பாக்கத்தில் உள்ள ஒரு பூங்காவிற்கு தனது மகன் விளையாட சென்றதாகவும், அங்கே இருந்த இளைஞர் ஒருவர் தனது மகனை தனியாக அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக அந்த புகாரில் தெரிவித்திருந்தார். இந்த சம்பவம் குறித்து விருகம்பாக்கம் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மேலும் அங்குள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததில் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது மதுரவாயல், ஆலப்பாக்கத்தைச் சேர்ந்த சேர்ந்த அரி(21), என தெரியவந்ததையடுத்து அந்த நபரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

 

விசாரணையில் பூங்காவில் விளையாடி கொண்டிருந்த சிறுவனை, அரி அழைத்துச் சென்று தான் சினிமா துறையில் பணிபுரிந்து வருவதாகவும், தனது செல்போனில் உள்ள சமூக வலைதள பக்கத்தில் பல்வேறு நடிகர்களுடன் பழக்கம் இருப்பதாக கூறி புகைப்படங்களை காண்பித்து அவர்களை பார்க்க அழைத்துச் செல்வதாக சிறுவனை அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து அரியை போலீசார் கைது செய்தனர். இவர் அண்மையில் வெளியான லப்பர் பந்து படத்தில் துணை நடிகராக நடித்ததும், பூங்காவிற்கு வரும் சிறுவர்களை இது போன்ற சினிமா பிரபலங்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை காண்பித்து பாலியல் தொந்தரவு செய்தது தெரியவந்தது. இதையடுத்து துணை நடிகர் அரி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

 

இதேபோல தன்னோடு நடிக்க வரும் பல துணை நடிகைகளோடு உல்லாசமாக இருந்ததாக கூறிய ஹரி, உணர்வுகளை கட்டுப்படுத்த முடியாமல் சிறுவர்களிடம் தன் இச்சையை தீர்த்துக் கொள்வதாகவும் விசாரணையில் தெரிவித்துள்ளார்.

சீரியலில் பெரிய ஆளாக வர வேண்டும் என நினைத்த தனக்கு அடக்கமுடியாத ஆசையால் தற்போது அசிங்கப்பட்டு நிற்பதாக அழுதுகொண்டே வாக்குமூலம் அளித்துள்ளார் ஹரி.

Trending News

Latest News

You May Like