சிறந்த நடிகையாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா அறிவிப்பு..!.
ஜவான் படத்திற்காக சிறந்த நடிகருக்கான தாதா சாகேப் பால்கே விருது, ஷாருக்கானுக்கு வழங்கப்பட்டது. ஜவான் படத்தின் சிறந்த நடிகைக்காக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவிற்கு வழங்கப்பட்டது.
சிறந்த இயக்குனருக்கான தாதா சாகேப் பால்கே விருதை அனிமல் படத்திற்காக சந்தீப் ரெட்டி வங்கா தட்டி சென்றார். அவரைத் தொடர்ந்து அனிமல் அவரைத் தொடர்ந்து அனிமல் படத்திற்காக சிறந்த வில்லன் விருதை நடிகர் பாபி தியோல் பெற்றார். மேலும் தாதா சாகேப் பால்கேவின் சிறந்த வில்லன் விருது ஜவான் படத்திற்காக விஜய் சேதுபதிக்கும், பதான் படத்திற்காக ஜான் ஆபிரகாமுக்கும் வழங்கப்பட்டது.
சிறந்த இசையமைப்பாளர் விருதை ராக் ஸ்டார் அனிருத் வென்றுள்ளார். அதுமட்டுமில்லாமல் பிரபல பின்னணி பாடகருக்கான விருது கே ஜே யேசுதாஸுக்கு வழங்கப்பட்ட நிலையில், பல ஆண்டுகளாக சினிமாவிற்காக அவரின் அர்ப்பணிப்பை பாராட்டி அனைவரும் எழுந்து நின்று அவருக்கான மரியாதையையும் செலுத்தினர். மேலும் சிறந்த நம்பிக்கைக்குறிய நடிகர் என்ற பிரிவின் கீழ் கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டிக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது.
தாதா சாகேப் பால்கே விருது வழங்கும் நிகழ்ச்சி நேற்று இரவு மும்பையில்
நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் ஷாருக்கான், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, பாபி டியோல், சந்தீப் ரெட்டி வங்கா உள்ளிட்ட பல நடிகர்களும், இயக்குனர்களும், இசையமைப்பாளர்களும் கலந்து கொண்டனர்.