பெண்களே இது உங்களுக்காக..! வேலை பார்க்கும் இடத்தில் பாலியல் தொல்லையா ? ஆன்லைனில் ஈசியாக புகாரளிக்கலாம்..!
மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் குறித்த புகார்களைப் பதிவு செய்வதற்கும் கண்காணிப்பதற்கும் ஹீ - பாக்ஸ் (https://shebox.wcd.gov.in/) என்ற இணையதளத்தை தொடங்கியுள்ளது. இந்த நிகழ்ச்சியின் போது மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் அன்னபூர்ணா தேவி இந்த அமைச்சகத்தின் புதிய இணையதளத்தையும் (https://wcd.gov.in/) தொடங்கி வைத்தார்.
புதிய ஷீ-பாக்ஸ் இணையதளம் அரசு மற்றும் தனியார் துறைகளை உள்ளடக்கிய நாடு முழுவதும் உருவாக்கப்பட்ட உள் குழுக்கள் (ஐ.சி) மற்றும் உள்ளூர் குழுக்கள் (எல்.சி) தொடர்பான தகவல்களின் செயல்படும் என்று அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. பெண்களுக்கான புகார்களை பதிவு செய்வதற்கும், அவற்றின் நிலையை கண்காணிப்பதற்கும் புகார்கள் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பரிசீலிக்கப்படுவதை உறுதி செய்வதற்கும் இது ஒரு பொதுவான தளத்தை வழங்குகிறது.
இது அனைத்து பங்குதாரர்களுக்கும் புகார்களுக்கு உறுதியான தீர்வு மற்றும் நெறிப்படுத்தப்பட்ட செயல்முறையை வழங்கும் என்று கூறப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட நோடல் அதிகாரி மூலம் இந்த இணையதள புகார்களை நிகழ்நேர கண்காணிப்புக்கு உதவும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. வேலை பார்க்கும் இடத்தில் பெண்களின் பங்களிப்பை அதிகரிப்பதற்கான இந்த முயற்சி பணியிடங்கள் பாதுகாப்பாக இருப்பதையும் உறுதி செய்வதாகும். இது பெண்கள் வெற்றிபெற உதவியாக இருக்கும். வேலை பார்க்கும் இடத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் (தடுப்பு, தடை மற்றும் குறைதீர்த்தல்) சட்டம்-2013, பணியிடங்களில் பாலியல் துன்புறுத்தல்களிலிருந்து பெண்களைப் பாதுகாக்கவும், அவர்களின் குறைகளைத் தீர்க்கவும் உதவுகிறது.
ஆன்லைனில் புகாரளிப்பது எப்படி?
* https://shebox.wcd.gov.in/ என்ற இணையதளத்திற்குச் சென்று 'Register your Complaint' விருப்பத்தைக் கிளிக் செய்யவும்.
* 'Register Complaint' செய்த பின், 'Central Government.' என்ற விருப்பத்தை தேர்ந்தெடுக்கவும்.
* அதன்பின் 'Ministry Of Women And Child Development' ஆப்ஸனை தேர்வு செய்து தேவையான விவரங்களை கொடுக்கவும்.
* பின்னர் கேட்கப்படும் தகவல்களை கொடுத்து Next என்பதை தேர்வு செய்து Submit செய்யவும்.